Sunday, November 29, 2020
தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்!
•தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்!
1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார்.
தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட.
மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்?
ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே.
தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய்.
தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை.
மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை.
நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை.
அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்?
இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை.
ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன்.
அந்த தாயாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
தமிழா!
தமிழா!
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது
காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு
கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது
நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது
அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது
தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது!
இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல்
அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!
ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்!
ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்!
புலிகள் இயக்க உறுப்பினர் வரதன் அவர்கள் மலையகத்தில் சயனைட் அருந்தி இறந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஜேக்கப் மேரியம்மா கைது செய்யப்பட்டார்.
மேரியம்மா கைது செய்யப்பட்டபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடும் சித்திரவதை மற்றும் நீண்டகால சிறைவாசத்தின் பின் மேரியம்மா விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த மேரியம்மா அவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள்.
இந்த தாயின் தியாகம் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மலையக தமிழ்மக்களின் பங்களிப்பை காட்டும் ஒரு உதாரணம் ஆகும்.
இனியாவது முரளியின் பட பிரச்சனையின் போது கருத்து தெரிவித்த தமிழக ஊடகவியலாளர் போன்றவர்கள் இந்த உண்மையை அறியட்டும்.
தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது
•தமிழர்
தமக்கு ஒரு கொடியை விரும்புவது
எப்படி தேசவிரோத குற்றமாகும்?
ஒருபுறம் தமிழர் நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் மறுபுறம் விழா கொண்டாடியவர்களை கைது செய்கிறது. இதுதான் தமிழக அரசின் “டயர்நக்கி” முதல்வரின் தமிழ் இனப் பற்று.
கன்னடம், ஆந்திரா, காஸ்மீர் யாவும் தமக்கென ஒரு கொடியை வைத்திருக்க அனுமதிக்கும் இந்தியஅரசு தமிழர் தமக்கென ஒரு கொடி வைக்க முனைவதை தேசவிரோதம் என்கிறது.
கர்நாடாவில் கன்னட கொடியை கன்னட அமைச்சர் ஏற்றுகிறார். அதை அனுமதிக்கும் இந்திய அரசு தமிழகத்தில் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்ற முனைவோரை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது.
தமிழக அரசே!
தோழர் பொழிலன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர்களை உடனே விடுதலை செய்.
அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் தேசவிரோத குற்ற வழக்கை வாபஸ் பெறு.
தாய்!
•தாய்!
ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது.
அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார்.
பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும்.
ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர்.
ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள்.
ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார்.
33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது. ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது.
தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார்.
இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது.
இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.
குறிப்பு - இன்று (02.11.2020) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.
இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்!
இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்!
இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொரோனோ ஒழிப்பிற்கு கை தட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்றார்.
ஆனால் இலங்கை சுகாதார அமைச்சரோ கொரோணோ பூதத்தை பிடித்து பானையில் அடைத்து ஆற்றில் வீசிவிட்டார்.
இலங்கையில் கொரோனோ அழிந்துவிட்டது என்று நம்புவோம்.
பாவம் மக்கள்!
குறிப்பு- வேடிக்கை என்னவெனில் கடந்தமுறை கொரோனோவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிய கோத்தா அரசு இம்முறை மந்திரித்த பானையை ஆற்றில் போடும் நிலைக்கு வந்துவிட்டது.
Subscribe to:
Posts (Atom)