Sunday, November 29, 2020
தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது
•தமிழர்
தமக்கு ஒரு கொடியை விரும்புவது
எப்படி தேசவிரோத குற்றமாகும்?
ஒருபுறம் தமிழர் நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் மறுபுறம் விழா கொண்டாடியவர்களை கைது செய்கிறது. இதுதான் தமிழக அரசின் “டயர்நக்கி” முதல்வரின் தமிழ் இனப் பற்று.
கன்னடம், ஆந்திரா, காஸ்மீர் யாவும் தமக்கென ஒரு கொடியை வைத்திருக்க அனுமதிக்கும் இந்தியஅரசு தமிழர் தமக்கென ஒரு கொடி வைக்க முனைவதை தேசவிரோதம் என்கிறது.
கர்நாடாவில் கன்னட கொடியை கன்னட அமைச்சர் ஏற்றுகிறார். அதை அனுமதிக்கும் இந்திய அரசு தமிழகத்தில் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்ற முனைவோரை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது.
தமிழக அரசே!
தோழர் பொழிலன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர்களை உடனே விடுதலை செய்.
அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் தேசவிரோத குற்ற வழக்கை வாபஸ் பெறு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment