Sunday, November 29, 2020
புட்டு சாப்பிட்ட தமிழர்கள
புட்டு சாப்பிட்ட தமிழர்களை பீட்சா சாப்பிட வைத்திருக்கிறோம் என கூறிய சிங்கள பொலிஸ் அதிகாரியை உடனே கண்டித்தவர் சுமந்திரன். இது பாராட்டுக்குரியது.
அதேபோல் சுமந்திரன் கண்டனத்தை அடுத்து நீதிபதியும் தனது அதிருப்தியை தெரிவித்தார் என செய்திகள் கூறுகின்றன. இது உண்மையாயின் இந்த தமிழ் நீதிபதியும் பாராட்டுக்குரியவர்.
இதை அறிந்தவுடன் அரசாங்க கட்சி எம்.பியாக இருந்தும் அங்கஜன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்ததாக அறிகிறோம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் கிடைக்கவும் செய்திருக்கிறார் என கூறுகின்றார்கள். எனவே அங்கஜனும் பாராட்டுக்குரியவர்.
இது ஒரு நல்ல மாற்றம். இதேபோன்று தமிழ் இனத்திற்கு இழுக்கு ஏற்படும்போதெல்லாம் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து எதிர்க்க வேண்டும்.
சிங்கள தலைவர்கள் எத்தனை கட்சியாக பிரிந்திருந்தாலும் தமிழ் இனத்தை அடக்குவதில் ஒருமித்து செயற்படுகின்றார்கள்.
எனவே தமிழ் தலைவர்களும் இனி ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும். ஆனால் தேன்கூட்டுக்கு கல் எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும்.
நாயை விட பலம் குறைந்தது தேனீ. ஆனாலும் அவற்றுக்கு பயந்து நாம் ஓடுவதற்கு காரணம் அவை ஒருமித்து சேர்ந்து வந்து தாக்குவதால்தான்.
எனவே நாம் பலம் குறைந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்டால் சிங்கள அரசை ஓடச் செய்ய முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment