Sunday, November 29, 2020
லெனின் ரஸ்சிய புரட்சி !
• லெனின் ரஸ்சிய புரட்சி !
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம்.
ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன.
மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது.
மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது.
சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது.
இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது.
அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது.
புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த புரட்சிகளே,
•உலகில் உழைக்கும்; மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன
•உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன.
•உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின.
உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்
நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால்
நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment