Saturday, March 27, 2021
அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட
அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட
பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலை!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு மத்திய அரசும் பாஜக கட்சியுமே காரணமாகும்.
தாம் ஆட்சிக்கு வந்தால் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என எந்தவொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்க முன்வரவில்லை.
பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுப்போம் என தாயார் அற்புதம்மாளிடம் கூறியவர்கள் இப்போது அந்த தாயையும் ஏமாற்றிவிட்டார்கள்.
பூனையும் எலியும் ஓடும்போது
பூனையும் எலியும் ஓடும்போது
பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன.
ஏனெனில்,
பூனை உணவுக்காக ஓடுகிறது
எலி உயிருக்காக ஓடுகிறது.
அதாவது,
தேவையைவிட குறிக்கோளே
அதிக திறமையை வெளிப்படுத்தும்.
அதேபோன்று,
அடிப்பதுதான் வன்முறை.
திருப்பி அடிப்பது வன்முறை அல்ல
அது தற்காப்பு எனப்படும்.
பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை வன்முறை என்றார்கள்.
“பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி கொன்று அழித்தார்கள்.
இப்போது அதே பெண்கள் அகிம்சை வழியில் போராடுகிறார்கள். ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லையே.?
இவர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள், இல்லையே?
நடந்த இனப்படுகொலைக்கு நீதிதானே கேட்கிறார்கள்.
அதைக்கூட இந்த அகிம்சை வழியால் பெற முடியவில்லையே.
அப்புறம் எப்படி அகிம்சை வழியில் தமிழ் இன விடுதலை பெற முடியும்?
நியாயவான்களே!
எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்? வந்து பதில் சொல்லுங்கள்.
தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
திமுக வின் தேர்தல் அறிக்கையும்
திமுக வின் தேர்தல் அறிக்கையும்
ஈழத் தமிழர் பிரச்சனை மீதான அக்கறையும்!
(1) இத்தனை நாளும் வலியுறுத்தி வந்த “தமிழீழம்” தீர்வு இம்முறை திமுக தன் தேர்தல் அறிக்கையில் கைவிட்டுள்ளது. ஆனால் தமிழீழம் ஏன் கைவிடப்படுகிறது என்பது பற்றி கூறப்படவில்லை.
(2) இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லது. ஆனால்
(அ) இதை கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?
(ஆ)இனப்படுகொலையில் திமுக வுக்கும் பங்கு உண்டு என்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் கூறியிருக்கிறார். இதற்கு திமுக பதில் அளிக்குமா?
(இ)இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?
(3) ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் இந்த அகதிகளுக்கு மருத்துவம் உட்பட உயர் கல்வி வாய்ப்பு மாநில அரசால் வழங்க முடியும். அதனை திமுக அரசு செய்யுமா? குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகள் போன்று ஈழ அகதிகளும் நடத்தப்படுவார்களா?
(4) கலைஞரால் 1990ல் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதை இப்போதாவது மூடி அதில் இருக்கும் அப்பாவி ஈழ அகதிகளை விடுதலை செய்ய திமுக அரசு முனையுமா?
தேர்தல் அறிக்கையில் என்னதான் கூறினாலும் ஆட்சிக்கு வந்தபின்பு ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே தனது கொள்கை என்று கலைஞர் கூறுவார். அதுபோல் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் நடந்து கொள்வார்.
குறிப்பு – திமுக வின் தேர்தல் அறிக்கை குறித்து ஈழத் தமிழர் அக்கறை கொள்ள எதுவுமேயில்லை. ஆனால் ஸ்டாலின் உண்மையில் ஈழத் தமிழர் மீது அக்கறை இருந்தால் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே? அவனுக்கு என்ன நடந்தது? என்பதையாவது தெரியப்படுத்துங்கள். அது போதும்.
2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை
2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை
• பலாலி விமான நிலையம்
• காங்கேசனதுறை; துறைமுகம்
• காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை
• திருகோணமலை எண்ணெய் குதங்கள்
• புல்மோட்டை இல்மனைற் வளம்
• சம்பூர் நிலக்கரி மின்சாரம்
• மன்னார் பெற்றோல் வளம்
2009க்கு பின்னர் இத்தனையும் பெற்றுக்கொண்ட இந்திய அரசு ஈழத்தமிழருக்கு பெற்றுக்கொடுத்த அதிகாரங்கள் என்ன?
நாம் அறிந்தவரையில் இந்திய அரசு வழங்கிய சில அதிகாரங்கள் (?)
(1) சம்பந்தர் ஐயாவுக்கு டில்லி மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை.
(2) சுரேஸ் பிரேமச்சந்திரன் மகளுக்கு டில்லி மருத்துவ கல்லூரியில் அனுமதி.
(3) செல்வம் அடைக்கலநாதனுக்கு திருச்சியில் வீடு மற்றும் பல கோடி ரூபா பெறுமதியான வியாபார நிலையம்
(4) மாவை சேனாதிராசாவுக்கு சென்னையில் பங்களா.
(5) ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இந்திய தூதரால் வழங்கப்படும் பல கோடி ரூபா நிதி.
இந்திய அரசு உண்மையில் கூறுகிறதோ இல்லையோ ஆனால் இந்திய அரசு கூறுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு; தொடர்ந்து கூறி வருகிறது.. இது ஏன்?
யார் தமிழர்கள்?
• யார் தமிழர்கள்?
செய்தி – தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் 75 % வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் கன்னடர்களுக்கே வேலை என்னும் சட்டம் கொண்டு வந்தபோது அவர்களை இனவாதிகள் என்றோ அல்லது யார் கன்னடர்களோ என்று எவரும் கேட்டதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வழங்க வேண்டும் என தமிழ்தேசிய உணர்வாளர்கள் கோரிய போது அவர்களை இனவாதிகள் என்றார்கள். அதுமட்டுமல்ல யார் தமிழர்கள்? என்று கேட்டார்கள். லேப் டெஸ்ட் செய்து தமிழர்களை கண்டு பிடிப்பீர்களா என நக்கலாக கேட்டனர்.
இப்போது அவர்கள் ஸ்டாலினை இனவாதி என்றோ அல்லது யார் தமிழர் என்பதை எப்படி ஸ்டாலின் கண்டு பிடிப்பார் என்றோ கேட்பார்களா?
ஸ்டாலின் உண்மையில் இச் சட்டம் கொண்டுவருவாரா என்று தெரியவில்லை. ஆனால் இச் சட்டம் கொண்டு வருவேன் என்று பேச வேண்டிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.
அந்தளவில் தமிழ் இன உணர்வாளர்களுக்கு வெற்றிதான்.
மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்
மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்
மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார்.
கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது.
பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது.
நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன.
மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன
15வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!
•15வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!
அவர் எந்தக் கட்சியிலும் இல்லை
அவர் எந்தப் பதவியிலும்கூட இல்லை
அவர் மற்றவர்கள்போல் ஒரு சாதாரண தமிழ் பெண்
அவர் விரும்பினால் மற்றவர்கள்போல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழலாம்
அவர் அவ்வாறு வாழ விரும்பவில்லை. எனவேதான்
அவர் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
அவர் விரும்பிய தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனாலும்
அவரது போராட்டம் தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்பதை சிந்திக்க தூண்டுகிறது.
Subscribe to:
Posts (Atom)