Saturday, March 27, 2021
திமுக வின் தேர்தல் அறிக்கையும்
திமுக வின் தேர்தல் அறிக்கையும்
ஈழத் தமிழர் பிரச்சனை மீதான அக்கறையும்!
(1) இத்தனை நாளும் வலியுறுத்தி வந்த “தமிழீழம்” தீர்வு இம்முறை திமுக தன் தேர்தல் அறிக்கையில் கைவிட்டுள்ளது. ஆனால் தமிழீழம் ஏன் கைவிடப்படுகிறது என்பது பற்றி கூறப்படவில்லை.
(2) இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லது. ஆனால்
(அ) இதை கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?
(ஆ)இனப்படுகொலையில் திமுக வுக்கும் பங்கு உண்டு என்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் கூறியிருக்கிறார். இதற்கு திமுக பதில் அளிக்குமா?
(இ)இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன?
(3) ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் இந்த அகதிகளுக்கு மருத்துவம் உட்பட உயர் கல்வி வாய்ப்பு மாநில அரசால் வழங்க முடியும். அதனை திமுக அரசு செய்யுமா? குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகள் போன்று ஈழ அகதிகளும் நடத்தப்படுவார்களா?
(4) கலைஞரால் 1990ல் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதை இப்போதாவது மூடி அதில் இருக்கும் அப்பாவி ஈழ அகதிகளை விடுதலை செய்ய திமுக அரசு முனையுமா?
தேர்தல் அறிக்கையில் என்னதான் கூறினாலும் ஆட்சிக்கு வந்தபின்பு ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே தனது கொள்கை என்று கலைஞர் கூறுவார். அதுபோல் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் நடந்து கொள்வார்.
குறிப்பு – திமுக வின் தேர்தல் அறிக்கை குறித்து ஈழத் தமிழர் அக்கறை கொள்ள எதுவுமேயில்லை. ஆனால் ஸ்டாலின் உண்மையில் ஈழத் தமிழர் மீது அக்கறை இருந்தால் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே? அவனுக்கு என்ன நடந்தது? என்பதையாவது தெரியப்படுத்துங்கள். அது போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment