•கண்டா வரச் சொல்லுங்க!
அந்த ஈழத்து சிவசேனைத் தலைவர்
சச்சிதானந்தம் ஐயாவைக் கண்டா வரச் சொல்லுங்க
கிளிநொச்சி சிவன் கோவிலும் சிங்கள புத்தரிடம்
பறிபோகிறது என்றுகூறி அவரைக் கூட்டி வாருங்க
யாழ் ஆயர் இல்லம் முன் போராட்டம் நடத்தியதுபோல்
தலதா மாளிகை முன் போராட்டம் நடத்த முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்க.
அடுத்தமுறை யாழ் இந்திய தூதருடன் ரீ குடிக்கும்போது
கிளிநொச்சி சிவன் கோவில் பறிபோவதை கூறமுடியுமா என கேளுங்க
வரும்போது கூடவே அந்த ஈழத்து பாஜக தம்பிகளையும் கூட்டி வரச் சொல்லுங்க.
No comments:
Post a Comment