Saturday, March 27, 2021
அம்பிகை அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை.
அம்பிகை அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை. அவர் எந்தக் கட்சியிலும் இல்லை. தனி மனிதரான அவரின் அகிம்சைப் போராட்டம் எப்படி தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் துரோகமாக அமையும் என புரியவில்லை.
கட்சிகளும் அதன் தலைவர்களும் போராட்டத்தை முன்னெடுக்காத நிலையில் மக்களின் இவ்வாறான தன்னெழுச்சி போராட்டங்கள் தோன்றுவது இயல்பு.
அம்பிகையின் தன்னெழுச்சிப் போராட்டம் இலக்கை அடையாமைக்கு காரணம் அவரது இலக்கின் தவறு அல்ல. மாறாக இலக்கை அடைய அவர் தேர்ந்தெடுத்த பாதையின் தவறாகும்.
ஆனால் துரதிருஸ்டவசமாக அம்பிகையை விமர்சிப்பவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்களேயொழிய யாருமே அவர் மேற்கொண்ட பாதையை விமர்சிக்க முன்வரவில்லை.
எதிரி மீதான விமர்சனம் என்பது புலி இரைமீது பாய்ந்து கவ்வுவது போன்று இருக்க வேண்டும். நட்பு சக்தி மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்க வேண்டும்.
அதாவது எதிரி மீதான விமர்சனம் ஈவு இரக்க மின்றி எதிரியை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நட்பு சக்தி மீதான விமர்சனம் அவர்கள் தவறை உணர வைத்து வென்றெடுக்க உதவ வேண்டும். அவர்கள் நெஞ்சை தொட வேண்டும்.
ஆனால் எம்மில் பலர் எதிரிகளான இலங்கை இந்திய அரசுகள் மீது மென்மையான விமர்சனம் வைக்கிறார்கள். நம்மவரான அம்பிகையை கிழித்து தொங்க விடுகிறார்கள்.
இதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க முடியும் என நம்புகிறார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment