Saturday, March 27, 2021
அம்பிகை அம்மையாரும்
அம்பிகை அம்மையாரும்
பாரதீயஐனதா வெங்காயங்களும்!
இந்தியாவில் பம்பாயில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதியானதால் அதை “பம்பாய் வெங்காயம்” என்று இலங்கையில் அழைக்கப்பட்டது.
அதேபோல் தற்போது இந்தியாவில் இருந்து “பாரதீயஐனதா வெங்காயம்” இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வெங்காயங்கள் தமக்கும் இந்திய பாரதீயஐனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல பாரதீயஐனதா என்ற பெயரின் அர்த்தம்கூட தமக்கு தெரியாது என்று இந்த வெங்காயங்கள் கூறுகின்றன.
இனப்படுகொலைக்கு நீதி கேட்டு லண்டனில் அம்பிகா அம்மையார் பத்து நாள்களாக உண்ணாவிரதம் தொடர்கிறார்.
இலங்கையில்கூட பலர் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் இந்த வெங்காயங்கள் தமக்கு இது பற்றி அக்கறை இல்லையாம். தாம் தமிழ் மக்களுக்காக எந்தப் போராட்டமும் செய்யப்போவதில்லையாம்.
சரி. போராட்டம் செய்வதில்லை என்றால் கட்சி எதற்கு என்று கேட்டதற்கு யாழ்ப்பாண மக்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஸ் படிப்பிக்கப் போகிறார்களாம்.
ஸ்போக்கன் இங்கிலிஸ்தான் இப்ப பிரச்சனையா? அல்லது அது படித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனையும் எப்படி தீரும்? என்பன பற்றி எந்த விளக்கமும் கூறப்படவில்லை.
இத்தனைக்கும் காரணகர்த்தா அந்த யாழ் இந்திய தூதரே. இந்த மூன்று வெங்காயங்களை வைத்து தமிழ் மக்களின் ஆழத்தை அறிய முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் யாழ் இந்திய தூதரின் முயற்சி வெற்றிபெறப்போவதில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல மயிரிலும்கூட பாரதீயஐனதா வளர முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment