Saturday, March 27, 2021
குஜராத் கொலைகாரனும்
•குஜராத் கொலைகாரனும்
முள்ளிவாயக்கால் கொலைகாரனும்!
மகிந்தராஜபக்சா - ரொம்ப நன்றி மோடிஜி! சொன்னமாதிரி எங்களை காப்பாற்றிவிட்டீர்கள்
மோடி - பரவாயில்லை. எங்களுக்;குள்ள எதற்கு நன்றியெல்லாம்?
மகிந்த ராஜபக்சா - இல்லை தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் எங்கே ஒருவேளை எங்களை கைவிட்டுவிடுவீர்களோ என பயந்தேன்.
மோடி - சரி சரி கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையம் என்ன மாதிரி?
மகிந்த ராஜபக்சா - கிழக்கு முனையத்தில் உங்களுக்கு 49 % இருந்தது. அதற்கு நம்ம புத்த பிக்குமார் எதிர்ப்பு தெரிவிச்சாங்கள். அதனால அதை எடுத்துவிட்டு மேற்கு முனையத்தில் 90 % தந்திருக்கிறேன். அதுவும் உங்கள் நண்பர் அதானி முதலாளிக்கு தந்துள்ளேன்.
மோடி - வெரி குட்.
மகிந்த ராஜபக்சா - அது சரி மோடிஜி! தமிழ்நாட்டு மக்களை எப்படி சமாளிக்கப் போறிங்க?
மோடி - அவங்களை ஒரு திருக்குறள் சொல்லி ஈசியாய் ஏமாத்திடலாம். அல்லது அடுத்தமுறை தமிழ்நாடு வரும்போது தமிழில் பேசுவேன் என்று சொன்னா உடனே நம்பிடுவாங்க.
மகிந்த ராஜபக்சா - அப்படியா? நானும் தமிழில் பேசிப்பார்த்துவிட்டேன். ஆனால் ஈழத் தமிழனை ஏமாற்ற முடியவில்லையே? கவனம் மோடிஜி! தமிழன்களை ரொம்பவும் குறைச்சு மதித்திடாதீங்க. என்ர அனுபவத்தில் சொல்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment