Saturday, March 27, 2021
910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா
910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா nஐட்கின் தலைமையில் நடைபெற்ற உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு சோசலிசப் பார்வையுடன் உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இதில் பெருமளவு ஆண்களும் பங்கு பற்றினர்.
இந்த தினமே உலக மகிளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றை அறியாமல் பெண்களைப் போல் ஆண்களுக்கும் சர்வதேச தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஒருவர் கேட்டிருக்கிறார்.
இவ்வாறு கேட்டிருப்பவர் ஆண் அல்ல. ஒரு பெண் அதுவும் பாரதீயஜனதாக்கட்சியைச் சேர்ந்த சோனல் மான்சிங் என்ற எம்.பி யே பாராளுமன்றத்தில் கோரியுள்ளார்.
நல்லவேளை. இதைக் கேட்டு பாரதீயஐனதாக்கட்சியின் ஆண் எம்.பிக்களே சிரித்துவிட்டனர்.
இப்படி ஒரு முட்டாள் எப்படி எம்.பி யாக இருக்கிறார்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment