Wednesday, March 31, 2021

அவர் விரும்பியிருந்தால்

அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் ஆயுதப் போராட்டப்பாதையை கைவிட்டு தேர்தல் பாதையில் பயணித்திருக்கலாம் அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் பாஜக பாசிசம் வந்துவிடும் என்றுகூறி திமுக கூட்டணியை ஆதரித்திருக்கலாம் ஆனால் அவர் மார்க்சிச லெனிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்தி தமிழ்நாடு விடுதலைக்காக போராடினார். அவர் தியாகம் வீண் போகாது. அவர் கனவு நிச்சயம் நிறைவேறும்.

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன்

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் குடும்பத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்க முடியாதவர்கள் இவரிடம் 35 லட்சம் ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்கிறார்கள். ஒரு ரூபா சம்பளத்தில் எப்படி 30 அயிரம் கோடி ரூபா சொத்து வந்தது என்று ஜெயா அம்மையாரிடம் கேட்க முடியாதவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தில் எப்படி வாழ்கிறீர்கள் என்று இவரிடம் கேட்கின்றனர். இதுவரை இவர் ஆட்சியில் இருந்ததில்லை. இம்முறையும் இவர் ஆட்சியைப் பிடிக்கப்போறதில்லை ஆனாலும் எல்லோரும் சேர்ந்து இவரை எதிர்கிறார்களே அது ஏன்? ஏனென்றால் இவர் ஒருவர்தான் “நாடு என் கையில் சிக்சிச்சு நீ செத்தே” என்று மகிந்த ராஜபக்சேவை எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் ஒருவர் மட்டுமே இனி தமிழன் மேல் கைவச்சால் திருப்பி அடிப்பேன் என்று கூறினார். கைக்கெட்டும் தூரத்தில் 7 கோடி தமிழர் தாம் இருந்தும் ஈழத் தமிழரை காக்க முடியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் உள்ளது. இந்த தமிழக இளைஞர்களின் உணர்வையே இவர் தன் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார். மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர்களுக்கும் இவரின் இந்த பேச்சு நிச்சயம் ஆறுதல் கொடுக்கும். இவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் இவர் ஒருவர் மட்டுமே இவ்வாறு பேசியிருக்கிறார்.

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல இடதுசாரி அமைப்புகள், பசுமை இயக்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கலந்துகொண்டு தமிழ் மக்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெர்மனி அரசின் இந்த நாடுகடத்தல் முயற்சி இரக்கமற்றது. இது மற்ற நாடுகளுக்கும் தவறான முன்னுதாரணத்தை கொடுக்கப்போகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்தும் ஜெர்மனியில் வாழ்வதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக தடாச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கட்சி மாறினால் வழக்கை வாபஸ் பெற்று விடுதலை செய்வதாக சிறையில் வந்து பேரம் பேசியபோதும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் மதுரை சிறையில் இருந்தபோது அச் சிறையில் இருந்த ஈழத் தமிழராகிய நாம் உண்ணாவிரதம் இருந்தபோது எமக்கு ஆதரவாக அவரும் உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் எமக்காக உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரைப் பார்க்க வந்த திமுக மாவட்ட தலைவர்களும் சிறைக்கு வெளியே குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் சிறை அதிகாரிகள் வேறு வழியின்றி எமது கோரிக்கையின்படி எம்மைத் தாக்கிய சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்கள். உண்ணாவிரதம் முடிவுற்றது என்று அதிகாரிகள் கூறியதை அவர் நம்பவில்லை. அப்புறம் நான் நேரடியாக கூறிய பின்பே அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். போராளிகளால் “சுப்பக்கா” என்று அன்பாக அழைக்கப்பட்டவர். அவர் அங்கம் வகிக்கும் திமுக கட்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஈழத் தமிழர் ஆதரவு என்பது மறக்க முடியாதது. பாராட்டுக்குரியது.

பொலிஸ் அரசின் ஏவல்நாய்

பொலிஸ் அரசின் ஏவல்நாய் அது எஜமான் குரைக்கச் சொன்னால் குரைக்கும் அது எஜமான் கடிக்கச் சொன்னால் கடிக்கும். அது எஜமான் வீசும் எலும்புத்துண்டிற்காக நன்றாக வாலாட்டும். நல்லவேளை. சமூகவலைத்தளங்களின் எதிர்ப்பால் உடனடியாக இந்த நாய் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாஜக வரலாறு காணாத தோல்வி

பாஜக வரலாறு காணாத தோல்வி அடையப்போகிறது என்று அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. பாஜக வேட்பாளர்களே தமது தலைவர் மோடியின் படத்தை மறைத்து விட்டு ஜெயா அம்மையாரின் படத்தை போட்டு வாக்கு கேட்கும் அவலம். பிரதமர் மோடி இன்னும் இரண்டு தடவை பிரச்சாரத்திற்கு வந்தால் அதிமுக வெல்லக்கூடிய இரண்டு மூன்று சீட்டுகளும்கூட இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை. வேடிக்கை என்னவெனில் தமிழ்நாட்டில் மலர முடியாத பாஜக கட்சி ஈழத்திலும் நேபாளத்திலும் மலரப் போகிறார்களாம்.

Saturday, March 27, 2021

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! லண்டனில் அம்பிகா செல்வகுமார் அவர்கள் இனப்படுகொலைக்கு நீதிகோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். ஜரிஸ் போராளிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை இறக்கவிட்ட பிரித்தானிய அரசு அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உண்ணாவிரதத்திற்கு மதிப்பளிக்குமா என்பது சந்தேகமே. எனவே இவ்வாறான தனிமனித போராட்டங்களை தவிர்த்து அதிகளவு மக்கள் பங்குபற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.