Wednesday, July 31, 2024

சாவதினாலேயே ஒருவர்

சாவதினாலேயே ஒருவர் புனிதராகி விடமாட்டார் செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு காலத்திற்கேற்ற மாற்றம் உண்டு செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம் செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம் - கவிஞர் தாமரை

ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன்

ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன் என்றும் அவர் ஒழிய வேண்டும் என திமுக கட்அவுட் வைத்திருந்தது. சைதாப்பேட்டை வளைவில் வைக்கப்பட்ட இக் கட்அவுட்டை நானே என் கண்ணால் கண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த மாதம் ராஜீவ் காந்தி ஒழிந்ததும் “இளம் தலைவர் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு” என முரசொலியில் கலைஞர் இரங்கல் தெரிவித்தார். அதேபோன்று “வயதாகிவிட்டது எனவே சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும்” எனக் கோரியவர் சுமந்திரன். அதுமட்டுமன்றி “இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு வயதான சம்பந்தர் ஐயாவே பொறுப்பு கூறவேண்டும்” என்று கடந்த மாதம் சுமந்திரன் கூறியிருந்தார். இன்று சம்பந்தர் ஐயா இறந்தவுடன் அவரது தலைமையை புகழ்கிறார். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கண்ணீர் வடிக்கிறார். உயிரோடு இருக்கும்போது ஒழிய வேண்டும் என்கிறார்கள். ஒழிந்ததும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார்கள். அப்படியென்றால் மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்து புனிதப்படுத்துகிறதா? அல்லது, தமிழ் மக்கள் முட்டாள்கள், தாம் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என இவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா?

தன்னை தமிழின தலைவர்

தன்னை தமிழின தலைவர் என்றவர் ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்தபோது தன்னைக் கொல்லப்பார்க்கிறாங்க காப்பாத்துங்க என்று அலறினார். ஆனால் மரணத் தறுவாயில் தியாகி சிவகுமார் கடைசியாக கூறிய வரிகள்” மீண்டும் தமிழனாக பிறந்து போராட விரும்புகிறேன்” இப்போது கூறுங்கள் யார் தமிழின தலைவர்?

சீமான் வைக்கும்

சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம் இனவாத தேசியம் என்றும் அதனால் ஆதரிக்க முடியாது என்று போலிக்கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர். அப்படியென்றால், தோழர் தமிழரசன் மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகள் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றுதானே முத்திரை குத்தினார்கள்.

செய்தி – அமைச்சர்

செய்தி – அமைச்சர் விஜயதாச ராஜபக்சா திருப்பதி சென்று வழிபாடு எத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்றாலும் பரவாயில்லை. திருப்பதி செல்லுங்கள். பாவ விமோசனம் தரப்படும்.

தோழர் சண் அவர்களின்

தோழர் சண் அவர்களின் 104வது பிறந்ததினம்! இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 104 வது பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2024) தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர். மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே. அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்தார். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார். அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார். அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள். இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது. அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன். அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும். குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s

இந்த பொருளாதார நெருக்கடியிலும்

இந்த பொருளாதார நெருக்கடியிலும் ஒருபுறம் நாடு நாடாக ஓடி ஓடி பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் புத்தவிகாரை கட்டுகின்றது சிங்கள அரசு. மகிந்தா வந்தால் என்ன, ரணில் வந்தால் என்ன, யார் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் மட்டும் மாறுவதில்லை. இதற்கு எதிராக மக்களை திரட்டி போராட வேண்டிய எம் தலைவர்களோ இந்திய அரசுக்கு கடிதம் எழுதுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அந்த இந்திய அரசின் ஆதரவுடனும் உதவியுடனும்தான் இந்த தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொள்கின்றது என்பதை நன்கு தெரிந்தும் தொடர்ந்தும் கடிதம் எழுதுவதையே போராட்டமாக நினைக்கின்றனர். ஆனால் இந்திய அரசோ கடிதம் கிடைத்தது என்றுகூடப் பதில் தருவதில்லை. அந்தளவு இறுமாப்புடன் அது நடந்து கொள்கிறது. அதாவது இந்த நாய்களை(தமிழ் தலைவர்களை) எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் தொடர்ந்தும் காலடியில் கிடந்து விசுவாசமாக வாலாட்டும் என இந்திய அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. சிலர் கேட்கிறார்கள் “ சிஙகள நிலத்தில் பல இந்துக் கோயில்கள் இருக்கும்போது தமிழர் நிலத்தில் புத்த விகாரை இருந்தால் என்ன தவறு ? என்று. சிங்களவர்கள் பெரும்பான்மையினர். அவர்கள் மத்தியில் எத்தனை இந்துக் கோவில்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் தமிழர் சிறுபான்மையினர். தமிழர் நிலத்தில் கட்டப்படும் புத்த விகாரைகள் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டவை.