Friday, July 31, 2015

சம்பந்தர் அய்யா அவர்களே!

 சம்பந்தர் அய்யா அவர்களே!
இந்திய அரசினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா?
கிழக்கு மாகாணத்தில் 675 சதுரகிலோ மீட்டர் பரப்பு நிலம் இந்தியாவுக்கு 2006ல் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் சம்பூர் தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர். இன்னும் அவர்கள் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர்.
2012ல் சம்பூரில் அனல் மின்நிலையம் செயற்பட தொடங்கும் என இந்தியா அறிவித்தது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை.
சம்பூரில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பகுதியை குறைந்த விலையில் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். பின்னர் இந்தியாவில் இருந்து அதிக விலையில் மின்சாரம் கேபிள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என (முட்டாள்தனமான) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பூரில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. சம்பூரில் இருந்து புல்மோட்டைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு "காந்தி வீதி" என பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
புல்மோட்டையில் இருந்து இல்மனைட், ரூடைல் மொனசைட், சர்கோன் போன்ற எண்ணெய்யைவிட பெறுமதி மிக்க கனிம வளங்கள் இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது.
மன்னாரில் உள்ள 7 எண்ணெய் வயல்களும் இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் எண்ணெய் 10 வீதம் இலங்கைக்கும் மீதி 90 வீதம் இந்தியாவுக்கும் சொந்தம் என (அடிமாட்டு) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி மட்டுமல்ல சிங்களப் பகுதியான அம்பலாந்தோட்டையில் உள்ள கொடவாய என்ற கனிம வளம் நிறைந்த பிரதேசமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏன் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவியது என்பது இப்போது புரிகிறது அல்லவா?
யுத்தத்தினால் அதிக லாபம் அடைந்தது இந்தியாதான் என்பது இப்போது உணர முடிகிறது அல்லவா!
ஆனால் இங்கு எமது கேள்வி என்னவெனில்,
• ஒரு பக்கம் சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு நிலங்கள் வழங்கப்படுகிறது. ஈழத் தமிழன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
• சிங்கள குடியேற்றம் நடைபெறுவதை கண்டிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட அதிகமாக இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை கண்டிக்க தயங்குவது ஏன்?
• சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவில் வந்து மீன் பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் தலைவர்கள் இந்தியா தமிழர் கனிம வளங்களை சுரண்டுவதற்கு எதிராக மௌனம் சாதிப்பது ஏன்?

No comments:

Post a Comment