தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா!
அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா!
கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ?
அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா?
(1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுகொலைகள் செய்தபோதும் அவர் அதனை கண்டிக்காது ஆதரவு தெரிவித்தவர்தானே!
(2)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் அவர் முன்வைத்த தமிழீழத்தை அவரே கைவிட்டிருப்பார். எனெனில் அவர் தமிழீழத்தை கைவிட்டு மாகாண அரசை மட்டுமல்ல மாவட்ட ஆட்சியைக்கூட கையேற்க முனைந்தவர்தானே!
(3)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இன்றும் அவர் தேர்தலில் போட்டியிட்டிருப்பார். அவரை மக்கள் நிராகரித்திருப்பார்கள். எனெனில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்தானே!
(4)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டாம் என்று இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரே பின்னர் அவரது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் ஆரம்பித்தபோது அதனை ஆதரித்தார்.
(5)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார். ஆனால் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் மூலம் மதுரை மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார்.
(6)தமிழ் மக்களின் ஒற்றுமை என தமிழர்விடுதலைக்கூட்டணி அமைத்த அமிர்தலிங்கம் அதற்கு மாறாக மட்டக்களப்பில் ராஜதுரைக்கு எதிராக காசிஆனந்தனை தேர்தலில் போட்டியிடவைத்தார்.
(7) அன்று ராஜதுரைக்கு தலைமைப்பதவி வழங்கியிருந்தால் இன்று வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைந்திருக்கும். தனது சுயநலத்திற்காக பிரிவினையை விதைத்தவர் அமிர்தலிஙகமே!
எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.
இங்கு எமக்கு எழும் சந்தேகம் என்னவெனில் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றவர்கள் ஏன் சம்பந்தர் அய்யாவை விட்டு வைத்தார்கள்?
No comments:
Post a Comment