• சிவாஜி கணேசனுக்கு எதற்கு வீர வணக்கம்?
அன்று பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள் இன்று சிவாஜி கணேசனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்கள்.
பாலுமகேந்திராவுக்கு எதற்கு வீரவணக்கம?; என்று கேட்டபோது "அவர் காசி ஆனந்தன் சயிக்கிளில் டபுள் சென்று பாடசாலைக்கு வெடி குண்டு வீசியவர்" என்றார்கள்.
இப்போது சிவாஜி கணேசனுக்கு எதற்கு வீரவணக்கம்? என்று கேட்டால் என்ன குண்டை வீசப் போகிறார்களோ தெரியவில்லை.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டில் போராளிகளுக்கு மாபெரும் அனுதாபமும் ஆதரவும் எழுந்தது. தமிழக மக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் உதவியையும் வழங்கினார்கள்.
அப்போது சிவாஜி கணேசனிடம் சென்று நிதி உதவி செய்யுமாறு கேட்ட "டெலோ" இயக்க போராளிகளிடம் தனக்கே சாப்பாட்டுக்கு காசில்லாமல் கஸ்டப்படுவதாகவும் அதனால் ஒரு சதமும் தன்னால் தரமுடியாது என்று சொல்லி அனுப்பியவர் இந்த சிவாஜி கணேசன்.
டெலோ இயக்க போராளிகளுக்கு மட்டுமல்ல எந்த போராளிகள் இயக்கத்திற்குமே ஒரு உதவியும் செய்யாதவர் இந்த சிவாஜி கணேசன்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்குகூட எந்த உதவியும் செய்யாத ஒரு நடிகருக்கு எதற்காக தமிழர்கள் பெயரால் வீரவணக்கம் செலுத்த வேண்டும்?
சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் எனபதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தமிழருக்கான சிறந்த தலைவர் அல்ல. அதனால்தான் அவர் ஒரு தி.மு.க இளைஞனிடம் தேர்தலில் தோல்வி கண்டார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட, மக்களால் தோற்கடிக்கப்பட்ட சிவாஜி கணேசனுக்கு மக்கள் பெயரால் எதற்கு சீமான் வீர வணக்கம் செலுத்துகிறார்?
சிவாஜி கணேசன் ஒரு நடிகர் மட்டுமே. அவருக்கு எதற்காக மக்கள் பணத்தில் சிலை வைக்க வேண்டும்? அவருடைய குடும்பத்தவர்கள் கோடிக் கணக்கான பணம் படைத்தவர்கள். தேவையானால் அவர்கள் தங்கள் பணத்தில் சிலை வைக்கலாம்தானே?
சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிலர் நடிகர்கள்; கோரிக்கை வைக்கின்றனர். அவர்கள் விரும்பினால் தங்கள் பணத்தில்; மணி மண்டபம் கட்டலாம். அதைவிடுத்து மக்கள பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என எதற்காக கோரிக்கை வைக்க வேண்டும்?
யார், யாருக்கெல்லாம் சிலை வைக்கிறார்கள். மணி மண்டபம் கட்டுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த தமிழர் தோழர் தமிழரசனுக்கு இவர்கள் ஏன் சிலை வைக்கவோ அல்லது மணி மண்டபம் கட்டவோ கோருவதில்லை?
அப்படியென்றால் தமிழ் நாட்டில் தமிழனுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு இடம் இல்லையா? அவர்கள் தியாகம் நினைவுகூரப்படத் தேவையில்லையா?
No comments:
Post a Comment