• சம்பந்தர் அய்யாவுக்கு சமர்ப்பணம்
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்ட்டிருக்கும் அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அகிம்சை வழியில் பல முறை உண்ணாவிரதம் இருந்தும் தமிழக அரசோ அன்றி இந்திய அரசோ இதுவரை இவர்களுக்கு பதில் அளிக்கவில்லை.
அகிம்சை போராட்டத்திற்கு இந்திய அரசே மதிப்பளிக்காத நிலையில் இலங்கை அரசு மதிக்குமா? இலங்கை அரசிடம் அகிம்சை வழியயில் தீர்வு பெற முடியுமா? சம்பந்தர் அய்யாவுக்கே இது வெளிச்சம்!
இலங்கையில்தான் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியவில்லை. தமிழகத்தில் உள்ளவர்களின் விடுதலைக்காவது சம்பந்தர் அய்யா குரல் கொடுக்கலாமே?
இந்தியாவில் குடி இருக்கிறார். இந்திய அரசை அடிக்கடி சந்திக்கிறார். இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் உதவும் என்கிறார். அப்படியென்றால் தனது செல்வாக்கை பாவித்து இந்த அகதிகளின் விடுதலைக்கு சம்பந்தர் அய்யா உதவலாம்தானே?
கடந்தமாதம் ஒரு அகதி தம்பதியினர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்து ஒரு ஊனமுற்ற இளைஞன் பாராமரிக்க யாருமற்ற நிலையில் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இப்படியே விரக்தியில் அப்பாவி அகதிகள் சிறப்புமுகாமில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன
தன்னை தமிழ்மக்களின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா இந்த தமிழ் அகதிகளின் விடுதலைக்கு உதவுவாரா?
No comments:
Post a Comment