லண்டனில் நடைபெற்ற முழுநாள் உரையாடல் நிகழ்வு
லண்டன் ஈஸ்ட்காமில் நேற்றைய தினம்(10.10.15) காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
"விடமேறியகனவு", "கனவுச்சிறை", "லண்டன்காரர்" அகிய மூன்று நாவல்கள் குறித்த அறிமுகம், விமர்சனம, கலந்துரையாடல் என்பன நடைபெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் அண்மையில் கனடாவில் காலம்சென்ற கவிஞர் திருமாவளவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி உரையை சபேசன் அவர்கள் நிகழ்தினார்.
மு.புஸ்பராசன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் சி.நவரட்னராணி வரவேற்பும் அறிமுகமும் உரை நிகழ்த்தினார்.
பத்மநாபன் ஜயர் மற்றும் மாலிங்கசிவம் ஆகியோர் வெளியீட்டுரை நிகழ்தினார்கள்.
அமர்வு-1 ல் குணா கவியழகன் எழுதிய "விடமேறியகனவு" நூல் பற்றிய விமர்சன உரையை அ.இரவி, கௌரி பரா, யமுனா ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
அமர்வு-2ல் சேனன் எழுதிய "லண்டன்காரர்" நூல் பற்றிய விமர்சன உரையை எஸ்.வேலு மற்றும் சந்தூஸ் பரராஜசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
அமர்வு-3 ல் தேவகாந்தன் எழுதிய "கனவுச்சிறை" நூல் பற்றிய விமர்சன உரையை வாசன், வினோதரன், மற்றும் மு.நித்தியானந்தன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இதனையடுத்து பௌசர் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.
இறுதியாக நூல் ஆசிரியர்கள் உரை இடம்பெற்றது. விசா கிடைக்காததால் குணா கவியழகன் நெரில் கலந்துகொள்ளமுடியாமையினால் இணையமூலம் தனது எற்புரையை வழங்கினார். அதையடுத்து சேனன் அவர்கள் தனது உரையினை வழங்கினார். அவரையடுத்து தேவகாந்தன் தனது உரையை வழங்கினார்.
கே.ராஜா அவர்கள் நன்றியுரை வழங்கியதையடுத்து நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வில் மதிய உணவு மற்றும் வடை ,தேனீர் என்பனவும் வழங்கப்பட்டது.
குறிப்பு- இந்த இலக்கிய நிகழ்வை "விம்பம்" சார்பாக நடத்திய ராஜாவின் பங்களிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment