• நடந்தது இனப்படுகொலையா அல்லது வெறும் போர்க்குற்றம்தானா?
லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன் " நடைபெற்றது இனப்படுகொலைதான். ஆனால் அதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இன்மையால் நடைபெற்றது போர்க்குற்றம் என்றே நாம் கூறவேண்டியிருக்கிறது என்றார்.
அதேகூட்டத்தில் கருத்துக்கூறிய தியாகி சிவகுமாரனின் சகோதரர் (இவரும் தமிழரசுக்கட்சியின் தீவிர உறுப்பினர்) "நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பதற்கு லண்டனில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டுங்கள்" என சுமந்திரனிடம் கேட்டார். ஆனால் சுமந்திரன் அதற்குரிய பதில் அளிக்கவில்லை.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய மாகாண முதல்வருமமான விக்கினேஸ்வரன் அவர்கள் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அப்படியாயின் அவர் ஆதாரம் இல்லாமலா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்? ஆதாரம் காட்ட வேண்டும் என்பது தெரியாமலா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்?
தமிழக சட்டசபையும் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலை என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
ஜெர்மன் தீர்ப்பாயம், ட்ப்ளின் தீர்ப்பாயம் போன்றவை நடந்தது இனப்படுகொலை என்றே கூறியுள்ளன. இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
நடந்தது இனப்படுகொலை என்றே சுமந்திரனும் ஏற்றுக்கொள்கிறார். அதற்குரிய ஆதாரம் இல்லை என்றால் தேiவையான ஆதாரத்தை திரட்டுவதுதானே ஓர் உண்மையான வழக்கறிஞரின் வேலையாக இருக்கவேண்டும்.
அதைவிடுத்து நாடு நாடாக வந்து இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்று மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விடுத்து அதற்குரிய ஆதாரங்களை திரட்ட சுமந்திரன் பொன்றவர்கள் முயற்சி செய்யலாமே!
No comments:
Post a Comment