•சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டவர்
புலம்பெயர் தமிழர்களுடன் இந்தியா தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்.
புலம்பெயர் தமிழர்களுடன் இந்தியா தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்துவதற்கு முழு உதவி வழங்கியது சோனியாவின் இந்திய அரசு என்பது யாவரும் அறிந்ததே.
40 ஆயிரம் அப்பாவி தமிழர்களின் அழிவில் சோனியாவின் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு என்பதும் யாவரும் அறிந்ததே.
இலங்கை அரசை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றி வருவதும் இந்திய அரசே.
இலங்கை அரசுக்கு இன்றும்கூட ஆயுத மற்றும் பயிற்சி வழங்கி வருவது இந்திய அரசே.
தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கி அழிக்க முனைவதும் இந்திய அரசே.
அந்த இந்திய அரசின் சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரது ரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கியதுடன் அவரது கண்களில் இரக்கத்தைக் கண்டேன் என்று தமிழ்மக்களிடம் கொஞ்சம்கூட வெட்கம் இன்றிக் கூறியவர் சுரேன்
இப்போது இந்த சுரேன் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இந்தியா தனது தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்
இதுவரை காட்டிக்கொடுத்து வந்தவர் இப்பொது புலம்பெயர் தமிழர்களை கூட்டிக் கொடுக்க முனைகிறார்.
இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியாவை நம்பும்படி தமிழ் மக்களிடம் எப்படி இவரால் கூற முடிகிறது?
No comments:
Post a Comment