•இருவரும் தமிழர்களே
ஆனால் உணர்வுகள் ஒன்றாக இல்லையே!
ஆனால் உணர்வுகள் ஒன்றாக இல்லையே!
நிமால். இவர் ஒரு முன்னாள் போராளி. இறுதி யுத்தத்தின்போது தனது இரண்டு கால்களையும் இழந்தவர். இவர் ஒரு இசைக் கலைஞன். தனது இசைதட்டு வெளியீட்டில் பெற்ற ஜம்பதாயிரம் ரூபா பணத்தை கிளிநொச்சியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதித்த மாணவி ஒருவருக்கு கொடுத்து உதவியுள்ளார்.
சம்பந்தர் அய்யா. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர். இதுவரை தன் பணத்தில் இருந்து ஒரு சதமேனும் மக்களுக்கு கொடுக்காதவர். மாறாக லிங்கா நகரில் இருக்கும் மக்களின் காணிகளை தனது என்று சொல்லி பணம் பறிக்க முயல்கிறார். இப்படிப்பட்டவருக்கு வாழ்நாள்வீரர் விருது கொடுக்கிறார்கள்.
நிமால் மற்றும் சம்பந்தர் அய்யா இருவரும் தமிழர்களே. ஒருவர் தன் கால்கள் அற்ற நிலையிலும் மற்றவர்களுக்கு உதவுகிறார். இன்னொருவர் வாழ்நாள் பூராவும் எம்.பி பதவியில் இருந்தபோதும் தமிழர்களுக்கு உதவுவதில்லை. அதுமட்டுமல்ல அப்பாவி மக்களின் காணிகளையும் அபகரிக்க பார்க்கிறார்.
இந்த சம்பந்தர் அய்யா மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிலர் இதுபோன்று வாழ்கிறார்கள்.
போராளிகள் போராடியபோது அதைக்காட்டி புலம்பெயர்;நத நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தற்போது அந்த போராளிகள் கஸ்டப்படும்போது உதவ மறுக்கிறார்கள்.
ஆனால் அதேவேளையில் சிலர் ஆடம்பர திருமணம், பிறந்தநாள் விழாக்கள் சாமத்தியசடங்கு என வீணாக பணத்தை செலவு செய்கின்றனர்.
உண்மையை சொல்வதானால் இந்த போராளி நிமால் சம்பந்தர் அய்யாவுக்கு மட்டுமல்ல இந்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஓங்கி முகத்தில் அறைந்துள்ளான். அவர்களுக்கு இனியாவது உறைக்கிறதா என பார்க்கலாம்.
தன் உதவி மூலம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டிய போராளி நிமாலுக்கு பாராட்டுகள்.
No comments:
Post a Comment