•லண்டனில் நடைபெற்ற "புளட்" தலைவர் சித்தார்த்தன் அவர்களின் கூட்டம்.
இன்று (03.02.2016) மாலை 6 மணியளவில் லண்டனில் ஈஸ்காமில் "புளட்" அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் எம்.பி அவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
நியுகாம் கவுன்சில் உதவி மேயர் போல் சத்தியநேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்;தினார்.
சித்தார்த்தன் அவர்கள் முதலில் தான் பங்கு பற்றிய ஸ்காட்லாந்து கலந்துரையாடல் விபரங்களை தெரியப்படுத்தினார். பின்னர் நாட்டு நிலைமைகள் குறித்து விளக்கினார். அதன் பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் ஆகியோர் லண்டனில் இருந்தபோதும் அவர்கள் தமிழ் மக்களை சந்திக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் சித்தார்த்தன் மக்களை சந்தித்து கலந்துரையாடியது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
மேலும் ஒரு நியாயமான தீர்வை தமிழ்தேசியகூட்டமைப்பு பெற்று கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அவ்வாறு நியாயமான தீர்வு இல்லையேல் உடனடியாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியெறுவோம் எனவும் சித்தார்த்தன் அவர்கள்; உறுதியளித்தார்.
சம்பந்தர் அய்யா அவர்கள் சுதந்திர தினக் கூட்டத்தில் பங்கு பற்றுவது குறித்து கேட்டபோது அது அவரது விருப்பம் என்றம் ஆனால் தான் ஒருபோதும் சுதந்திர தினக் கூட்டங்களில் பங்பற்றியது இல்லை என்றும் அதுபோல் ஒருபோதும் இலங்கை தேசியக்கொடியை ஏற்றியது இல்லை என்றும் சித்தார்த்தன் அவர்கள் கூறினார்.
இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில் இந்தியா எப்போதும் தனது நலன்களுக்காகவே செயற்படுகிறது என்றும் ஆனால் அதேவேளை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் மூலம் எமக்கு சாதகமாக செயற்பட வைக்க முயல்வதாக குறிப்பிட்டார்.
அதேவேளை 1லட்சத்து 20 ஆயிரம் இந்திய ராணவ வீரர்கள் இருந்த காலத்தில்கூட இந்தியாவால் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்று தரமுடியாதபோது இன்று அது ஒரு நியாயமான தீர்வை பெற்று தரும் என்று எப்படி நம்புவது என்றும் கேட்டார்.
இறுதியாக , புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பதை தான் வரவேற்பதாகவும் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது தமிழ் தேசியகூட்டமைப்பு சரியான வழியில் செயற்படுவதற்கு உதவும் என்று சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment