சிறீதரன் எம்.பி- அய்யா , இது முருகனின் தாய். தன் மகனின் விடுதலைக்கு உதவும்படி கேட்டு வந்திருக்கிறார்.
சம்பந்தர்அய்யா- எந்த முருகன்? வெலிக்கடை சிறையில் இருக்கிறாரா?
சிறீதரன் எம்.பி- ஜயோ அய்யா! இது ராஜீவ் காந்தி வழக்கில் தமிழ்நாட்டு சிறையில் இருக்கும் முருகனின் தாயார்.
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? இப்ப அதுக்கு என்ன?
சிறீதரன் எம்.பி - 28 வருடமாகிவிட்டது. தான் சாகுறதற்குள்ள மகனை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
சம்பந்தர் அய்யா- நான் இலங்கை சிறையில் இருக்கிறவையைக்கூட விடுதலை செய்யும்படி கேட்கிறதில்லை. அப்படியிருக்க இந்திய சிறையில் இருக்கிறவரை விடும்படி எப்படி கேட்பேன்?
சிறீதரன் எம்.பி- தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா தலைவர்களும் எழுவர் விடுதலைக்கு குரல் கொடுக்கினம். அந்த எழுவரில் நாலுபேர் ஈழத் தமிழர். அப்ப நாங்களும் குரல் கொடுக்க வேண்டியது கடமை அல்லவா?
சம்பந்தர் அய்யா- நீர் சொல்வது புரியுது. ஆனால் இன்னொரு நீதிமன்ற விடயத்தில் நாங்கள் தலையிடுவது முறையல்ல அல்லவா?
சிறீதரன் எம்.பி- ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டபோது அவரை விடுதலை செய்யும்படி நாங்கள் அறிக்கை விட்டோம் அல்லவா.
சம்பந்தர் அய்யா- ஓமோம் ஓமோம் அறிக்கை விட்டனாங்கள்.
சிறீதரன் எம்.பி- அப்ப ஜெயா அம்மையாரை விடுதலை செய்யும்படி கேட்டது அந்த நாட்டு நீதிமன்ற விடயத்தில் தலையிடுவது போல் இல்லையா? ஜெயா அம்மையாருக்கு ஒரு நியாயம். பேரறிவாளன் மற்றும் முருகனுக்கு இன்னொரு நியாயமா என்று கேட்கப் போகிறார்கள்.
சம்பந்தர் அய்யா- கேட்பான்கள், கேட்பான்கள். அதுவும் பத்திரிகைக்காரன்கள் கேட்காவிட்டாலும் பேஸ்புக்கில் கேட்டு கிழிப்பாங்கள்.
சிறீதரன் எம்.பி- அதுமட்டுமல்ல அய்யா, தேர்தல் வரப்போகுது. இப்ப அறிக்கை விட்டால் எலெக்சனுக்கு பயனாகவும் இருக்கும்.
சம்பந்தர் அய்யா- அறிக்கை விடலாம்தான். ஆனால் இந்த இந்திய தூதருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. அப்புறம் அடுத்த மாதம் நான் இருதய செக்கப்பிற்காக டில்லி போறதை குழப்பிப் போடுவார்.
சிறீதரன் எம்.பி- அப்ப என்ன செய்யலாம் அய்யா?
சம்பந்தர் அய்யா- பார்க்கலாம். முன்னாள் மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டால் நாமும் அறிக்கை விடலாம்.
சிறீதரன் எம்.பி- எல்லை தாண்டிப் போன இந்திய பசு மாட்டை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும்படி பல நாடுகள் பாகிஸ்தானிடம் கேட்டன. பாகிஸ்தானும் பொது மன்னிப்பு அளித்து அந்த பசு மாட்டை விடுதலை செய்துள்ளனர்.
சம்பந்தர் அய்யா- அதுக்கு?
சிறிதரன் எம்.பி- ஒரு பசு மாட்டுக்கு கேட்க முடியுமென்றால் நாம் எமது இனத்து இளைஞர்களுக்காக கேட்கக்கூடாதா?
No comments:
Post a Comment