•இனியும்
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என்று
நம்புபவர்களை என்னவென்று அழைப்பது?
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என்று
நம்புபவர்களை என்னவென்று அழைப்பது?
அண்மையில் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு 4 மணி நேர விசிட் அடித்தார்.
அவரை வெறும் 15 நிமிடங்கள் சந்தித்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், “இந்தியா தீர்வு பெற்று தரப் போகிறது” என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.
இதேபோல் 2014ல் மோடி பிரதமராக பதவி யேற்ற போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தர் ஐயாவையும் சந்தித்தார்.
அப்போதும் இதேபோல் மோடி மகிந்தவை மிரட்டியதாகவும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப் போகிறார் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கூறியிருந்தார்கள்.
எனவே இனி அடுத்து 2024ல் மோடி பிரதமரானால் அப்போதும் இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கொஞ்சம்கூட கூசாமல் இப்படித்தான் கூறுவார்கள்.
சரி இந்த பிரதமர் மோடி பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
நேற்றைய தினம் 65 இந்திய தமிழர்கள் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் “ இந்த தமிழர்களுக்காக என் இதயம் ரத்தம் சிந்துகிறது” என்று கூறியுள்ளார்.
இந்த 65 தமிழர்களும் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு மோடி குடியுரிமை வழங்கியுள்ளார்.
பங்களாதேசில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு மோடி குடியுரிமை வழங்கியுள்ளார்.
ஆனால் இலங்கையில் இருந்து வந்த இந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
ஏனெனில் இவர்கள் இந்துவாக இருந்தாலும் தமிழர்கள் என்பதால் குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
கனடாவில் அகதியாக சென்ற தமிழர் 7 வருடத்தில் குடியரிமை பெற்று அந் நாட்டு எம்.பி யாகவும் தெரிவாகிறார்கள்.
லண்டனுக்கு அகதியாக சென்ற தமிழர்கள் 7 வருடத்தில் குடியரிமை பெற்று 500 கோடி ரூபாவுக்கு படம் எடுக்கும் தொழில் அதிபராகவும் உருவாகியுள்ளார்கள்.
ஆனால் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்ற தமிழ் அகதிகளுக்கு 35 வருடத்திற்கு பின்பும்கூட மோடி குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கே குடியுரிமை வழங்க மறுக்கிற மோடி ஈழத் தமிழர்களுக்கு உதவுவார் என்று எப்படி நம்புவது?
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே தனது இதயம் ரத்தம் சிந்துகிறது என்கிறார். ஆனால் மோடியின் இதயம் இரங்கக்கூட மறுக்கிறதே?
குறிப்பு – அர்ஜீன் சம்பத் மற்றும் ஈழத்து சிவசேனை தலைவர் சச்சி ஐயா எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment