Saturday, June 29, 2019

பத்மநாபா ! தெரிந்து கொள்ளப்பட வேண்டியவரா? புரிந்து கொள்ளப்பட வேண்டியவரா?

பத்மநாபா !
தெரிந்து கொள்ளப்பட வேண்டியவரா?
புரிந்து கொள்ளப்பட வேண்டியவரா?
பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை.
மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும்.
பத்மநாபா விடுதலையை விரும்பினார்
பத்மநாபா புரட்சியை விரும்பினார்
பத்மநாபா ஈழத்தை விரும்பினார்
ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார்.
ஆனால்,
நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள்
நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள்
நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள்
இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள்.
இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில்
தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார்.
தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்
இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார்.
அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார்.
இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார்.
அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார்.
பத்மநாபா விதைக்கப்படவில்லை அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தியாகிகள் முளைப்பதற்கு.
பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த் தெழுவார் என்று
ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment