•திருச்சி சிறையில் மேற்கொள்ளப்பட்ட
தமிழ்தேசிய போராளிகள் மீதான தாக்குதலை கண்டிப்போம்!
தமிழ்தேசிய போராளிகள் மீதான தாக்குதலை கண்டிப்போம்!
திருச்செல்வம் , கார்த்திக் ஆகிய தமிழ் தேசிய போராளிகள் கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை செய்யப்படவில்லை. அவர்களுக்கு ஜாமீனும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மதுரை சிறையில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகளை தட்டிக் கேட்டமைக்காக அவர்களை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்துள்ளது தமிழக அரசின் சிறைத்துறை.
அதுமட்டுமன்றி திருச்சி சிறையில் இவர்கள் இருவரும் காவலர் மற்றும் அதிகாரிகளால் மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் தாக்கிய செய்தி வெளிவந்துவிடும் என்று எண்ணி இவர்களுக்கு சிகிச்சைகூட அளிக்காமல் அடைத்து வைத்திருக்கிறார்கள் சிறைத்துறையினர்.
ஊழல் செய்து அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்திற்கு தினமும் மதிய சாப்பாடு வீட்டில் இருந்து வழங்க அரசு அனுமதிக்கிறது.
அதுமட்டுமல்ல அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் உட்பட பல தமிழக தலைவர்கள் கோரி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து டில்லிக்கே சென்று சிதம்பரத்தை சந்தித்து திருக்குறள் கூறுகிறார்.
ஆனால் அவரால் மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இத் தமிழ் தேசிய போராளிகளை சென்று பார்வையிடாவிட்டாலும் பரவாயில்லை விடுதலை செய்யும்படி ஒரு திருக்குறள் கூற முடியவில்லை.
இவர்கள் தமிழ் தேசியத்திற்காக தோழர் தமிழரசன் காட்டிய பாதையில் போராடுவதால்தான் சிறையில் அடைக்கப்பட்டு பழி வாங்கப்படுகிறார்கள்.
இவர்களை சித்திரவதை செய்தால் இனி யாரும் தமிழ் தேசிய விடுதலைக்காக குரல் கொடுக்க முனவர மாட்டார்கள் என்று தமிழக அரசும் அதன் காவல்துறையும் நினைக்கிறது.
இதுபோலத்தான் இலங்கையிலும் ஆரம்பத்தில் பஸ்தியாம்பிள்ளை போன்ற தமிழ் பொலிஸ் அதிகாரிகள் மூலம் தமிழ் போராளிகளை சித்திரவதை செய்தது இலங்கை அரசு.
தமிழ் போராளிகள் இல்லாமல் போவார்கள் என்று இலங்கை அரசு நினைத்தது. ஆனால் அதற்கு மாறாக பஸ்தியாம்பிள்ளை போன்ற அதிகாரிகள்தான் இல்லாமற் போனார்கள்.
அதுபோலவே தமிழகத்திலும் தமிழ்தேசிய போராளிகளை தாக்கி சித்திரவதை செய்யும் பொலிஸ் அதிகாரிகள் இல்லாமற் போவார்கள். தமிழ் தேசிய போராளிகள் ஆயிரம் ஆயிரமாக பெருகுவார்கள்.
தோழர்கள் திருச்செல்வம், கார்த்திக் ஆகியோர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்.
இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்!
குறிப்பு – ரவுடிகளின் கையை பொலிசார் அடித்து முறித்ததை விசாரணை செய்த தமிழக மனிதவுரிமை அமைப்பு இத் தாக்குதலை விசாரணை செய்யுமா?
No comments:
Post a Comment