இந்த அவலம் என்று தீரும்?
வடக்கு கிழக்கு இணைப்பை தவிர மற்ற அனைத்தையும் தமிழ் மக்களுக்கு தருவேன் என்று ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளர் அனுரா கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தருவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சா கூறுகிறார்.
எனது தந்தையை புலிகள் கொன்றிருந்தாலும் தமிழ் மக்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களுக்கு அனைத்தையும் தருவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறுகின்றார்.
ஆனால் நெடுங்கேணியில் ஒரு தமிழ் பெண் தன் இரு பிள்ளைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தாய் காப்பாற்றப்பட்டுவிட்டார். ஆனால் கிணற்றில் வீசப்பட்ட நாலு வயது பெண் குழந்தையும் இரண்டு வயது ஆண் குழந்தையும் இறந்துவிட்டன.
எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் சோறு போட்ட வன்னியில் பெற்ற தாயே பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயல்வது வேதனையான விடயமாகும்.
ஆனால் எமது தமிழ் தலைவர்களோ இது பற்றி கவலையின்றி ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரிடம் எத்தனை பெட்டி வாங்குவது என்று ஆலோசிக்கிறார்களாம்.
குறிப்பு – கீழே உள்ள படம் இதே வன்னியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்த குழந்தைகள் ஆகும்.
No comments:
Post a Comment