Thursday, October 27, 2022
காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?
•காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?
அகிம்சை வழியில் போராடி காந்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
இதை இந்தியர்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர் பலர் நம்புகிறார்கள்.
ஏனெனில் சிறுவயது முதல் இது போதிக்கப்படுகிறது. இதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது.
அதனால்தான் அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்க முடியும் என்று சுமந்திரனால் தைரியமாக கூறமுடிகிறது.
ஆனால் உண்மையில் இந்தியாவில் நடந்தது என்ன?
இதுபற்றி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் தன் நூலில் எழுதியிருப்பது வருமாறு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எப்போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி ஆயுத புரட்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி, தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார். இந்த வழியில் நாம் போராடுவது தவறு, நாம் அகிம்சையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பார். மக்கள் புரட்சியால் நிலமை கட்டுக்கடங்காமல் போய், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில், காந்தி அகிம்சை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார். பிறகு அந்த செய்தி நாடு முழுக்க பரவும், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆவார்கள். இப்படியே நாங்கள் இந்தியாவை மேலும் 10 ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தோம்”.
இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பாதை மூலம் நடத்திய போராட்டம் யாவும் இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதற்கே உதவி வந்தது.
எனவே தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள், (1) அகிம்சை வழியில் விடுதலை பெற முடியாது (2) ஆயுத போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment