Tuesday, June 27, 2023
ராஜீவ் காந்தி கொலையின் பின்னர்
ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை மட்டுமன்றி ஈழத் தமிழரை ஆதரிப்பவர்களையும் பிடித்து சிறையில் அடைத்துக் கொண்டிருந்தார்.
அவ்வேளையில் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தவர்களில் ஆனைமுத்து ஐயா அவர்களும் ஒருவர்.
குறிப்பாக சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து தனது சிந்தனையாளன் இதழில் தவறாமல் பிரசுரித்து வந்தார்.
நான் சிறப்புமுகாமில் அடைபட்டிருந்தபோது எனக்கு தமது சிந்தனையாளன் இதழை எட்டு வருடங்கள் தவறாமல் அனுப்பி உதவினார்.
ஒருமுறை அவரை நேரில் சந்தித்தபோது யாழ் தேசவழமை சட்ட நூல் வேண்டும் என்று கூறினார்.
அது மிகவும் பழமையான நூல். அவர் கேட்ட பிறகே அப்படி ஒரு நூல் இருப்பது எனக்கு தெரிந்தது.
கொழும்பில் தேசிய சுவடுகள் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரதி இருந்தது. அதுவும் பழுதடைந்து இருந்தது.
மிகவும் சிரமப்பட்டு அதனை போட்டோ கொப்பி எடுத்து ஐயாவிடம் கொடுத்தேன்.
அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சி இப்பவும் என் நினைவில் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment