Tuesday, January 31, 2017

•எதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு

•எதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு
பேசாமா தமிழ்நாட்டை தனியா பிரிச்சு விட்டுடுங்களேன்!
பிரதமரை விமர்சித்தவர்கள் “சமூகவிரோதிகள்” என்று பா.ஜ.க வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமைதி வழியில் போராடிய மாணவர்களை “பயங்கரவாதிகள்” என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரை மோடி முதல் அனைத்து பா.ஜ.க வினரும் அப்போது விமர்சித்திருந்தனர்.
ஆனால் அப்போது பிரதமர் மன்மோகன்சிங் இவர்களை சமூகவிரோதிகள் என்று கூறவில்லை.
ஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். யாரையும் யாரும் விமர்சிக்க முடியும். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
ஆனால் அன்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்தவர்கள் இன்று மோடியை விமர்சிப்பவர்களை பார்த்து சமூகவிரோதிகள் என்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்பட்ட கிட்லர் முசோலினி கூட தம்மை விமர்சிப்பவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதில்லை.
அதுமட்டுமல்ல டில்லியில் இருந்துகொண்டு 8 கோடி தமிழர்களையும் பொறுக்கி என்று சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமல்ல அவருக்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.
இப்பொது சமூகவிரோதிகள் என்பார்கள். அப்புறம் விமர்சிப்வர்களை பாகிஸ்தான் போகும்படி கூறுவார்கள்.
எதற்கு இந்த சிரமம். பேசாமல் தமிழ்நாட்டை தனியாக பிரித்து விடுங்களேன்!

•சுப்பிரமணியசுவாமிக்கு ஒரு சவால்!

•சுப்பிரமணியசுவாமிக்கு ஒரு சவால்!
தமிழ் மாணவர்கள் அமைதி வழியில் போராடிய போது அவர்களை “பொறுக்கி” என்றும் சுப்பிரமணியசுவாமி கிண்டல் செய்தார்.
அதுமட்டுமல்ல தமிழ் மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தி கலைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இப்போது கர்நாடகாவில் கம்பாலா என்னும் எருதுமாட்டு விளையாட்டிற்காக கன்னட மக்கள் போராடுகின்றார்கள்
போராடிய தமிழ் மாணவர்களை பொறுக்கி என்ற சுப்பிரமணியசுவாமி தற்போது போராடும் கன்னட மாணவர்களை பொறுக்கி என்று குறிப்பிடுவாரா?
போராடும் கன்னட மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி இப்போது கோருவாரா?
அவருடைய வாய்வீரம் எல்லாம் தமிழ் மக்களிடம் மட்டும்தானா அல்லது கன்னட மக்களிடமும் காட்டுவாரா?
டில்லியில் இருந்துகொண்டு இவர் தமிழ் மக்களை பொறுக்கி என்று கேவலமாக கூறுகின்றார். இவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்மக்களை கேவலமாக பொறுக்கி என்று திட்டுவதற்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் அவருக்கு ஆயுதம் எந்திய பொலிஸ் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.
அவரை இனி சுப்பிரமணியசுவாமி என்று அழைக்ககூடாது. பொறுக்கி சுவாமி என்றே அழைக்க வேண்டும்.

•தனக்குதானே பட்டம் கொடுத்து மகிழும் சம்பந்தர் அய்யா!

•தனக்குதானே பட்டம் கொடுத்து மகிழும் சம்பந்தர் அய்யா!
திருகோணமலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் சம்பந்தர் அய்யாவின் கோவிலாகும்.
சம்பந்தர் அய்யா வெளிநாடு வரும்போதெல்லாம் தமிழர் பிரச்சனைகளுக்காக செலவு செய்த நேரத்தைவிட இந்த காளி அம்மன் கோவிலுக்கு நிதி சேகரிக்க செலவு செய்த நேரமே அதிகம் ஆகும்.
இந்த காளி அம்மனே கனவில் வந்து தனக்கு சொன்னதாக கூறி துரைரட்ணசிங்கத்திற்கு எம்.பி பதவியை வழங்கினார்.
இப்போது எம்.பி துரைரட்ணசிங்கம் இந்த காளி அம்மன் கோவில் பெயரில் “ இறை பணிச் செம்மல்” என்ற பட்டத்தை சம்மந்தர் அய்யாவுக்கு வழங்கி உள்ளார்.
இந்த காளி கோவிலில் பல லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட மண்டபம் சம்பந்தர் அய்யாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பல்லாயிரம் ரூபா செலவில் மகா கும்பாபிசேகமும் சம்பந்தர் அய்யா முன்னிலையில் நடந்துள்ளது.
சம்பந்தர் அய்யாவுக்கு வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
சம்பந்தர் அய்யா கோவில் கட்டிய கிழக்கு மாகாணத்திலேதான் அதிக அளவிலான விதவைகள் உதவி இன்றி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்தவாரம் காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை போய் சந்தித்து ஆறுதல் கூறக்கூட சம்பந்தர் அய்யா விரும்பவில்லை.
ஆனால் பல லட்சம் ரூபா செலவில் கோவில் கட்டி அந்த கோவிலின் பெயரால் தனக்கு தானே பட்டம் சூட்டி மகிழ்கிறார் சம்பந்தர் அய்யா.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய சம்பந்தர் அய்யாவோ கோவில் கட்டி சேவை செய்கிறார்.
காளி அம்மனில் நம்பிக்கை வைப்பதோ அல்லது கோவில் கட்டி மகிழ்வதோ சம்பந்தர் அய்யாவின் சொந்த விருப்பமாக இருக்கலாம்.
அதை அவர் செய்ய விரும்பினால் தாராளமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் செய்யட்டும்.
மாறாக தனது சொந்த விருப்பங்களுக்காக தமிழ் இனத்தை படுகுழியில் தள்ளும் வேலையை செய்ய அனுமதிக்க முடியாது.

•ஈழத்து கருணாநிதியா நம்ம சம்பந்தர் அய்யா?

•ஈழத்து கருணாநிதியா நம்ம சம்பந்தர் அய்யா?
நம்ம எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யாவை ஈழத்து கருணாநிதி என்று அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறார்.
தமிழகத்தில் தனக்குதானே அதிகளவு பட்டங்களை வழங்கிய தலைவராக கருணாநிதி இருக்கிறார்.
அதேபோல் இலங்கையில் தனக்குத்தானே அதிகளவு பட்டங்களை வழங்கி வரும் தலைவராக சம்பந்தர் அய்யா இருக்கிறார்.
பட்டம் , பதவி இல்லாமல் கருணாநிதியால் இருக்க முடியாது. அதுபோல் சம்பந்தர் அய்யாவாலும் பட்டம், பதவி இல்லாமல் இருக்க முடியாது.
பதவியை பெறுவதற்காக தன் சொந்த இனத்தையும் காட்டிக் கொடுக்க கருணாநிதி தயங்கமாட்டார்.
அதேபோல் சம்பந்தர் அய்யாவும் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்தே பதவிகளை பெற்று வருகிறார்.
இன்னும் இவர் சாகவில்லையா என்று தமிழக மக்கள் கருணாநிதியை நினைக்கின்ற அவலமே ஈழத்திலும் சம்பந்தர் அய்யாவுக்கும் இருக்கிறது.
கருணாநிதி கறுப்பு பூனை பாதுகாப்பில் வலம் வருகிறார். சம்பந்தர் அய்யாவோ சிங்கள பொலிசின் பாதுகாப்பில் வலம் வருகிறார்.
ஆனால் என்னதான் இருந்தாலும் கருணாநிதி தமிழக மக்கள் மத்தியில் தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். சம்பந்தர் அய்யாவோ குடும்பத்துடன் சொகுசாக இருப்பது இந்தியாவில்.
கருணாநிதி தனது பெரியவீடு சின்ன வீடுகளை பகிரங்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் சம்பந்தர் அய்யாவும் தனது வீடுகளை பகிரங்கமாக காட்டுவாரா?

•கிழவியையும் ஓடவிடும் சுமந்திரன் !

•கிழவியையும் ஓடவிடும் சுமந்திரன் !
(சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு)
ஒரு நாள் காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த யானை ஒன்று “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று பசு ஒன்றிடம் கேட்டது.
அதற்கு அந்த பசு “காட்டில் உள்ள எருமைகளை எல்லாம் பிடிக்க இலங்கை புலனாய்வுதுறை வருகிறது.அதுதான் ஓடுகிறோம்” என்றது.
அதைக் கேட்ட யானை “ நீ எருமை இல்லையே. பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய?”; என்று கேட்டது.
அதற்கு அந்த பசு “ உண்மைதான். ஆனால் நான் எருமை இல்லை பசு என்பதை நிரூபிக்க 20 வருடம் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது.
அதைக் கேட்ட யானையும் பசுவுடன் சேர்ந்து ஓடியது.
இது ஒரு எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் இப்ப இன்னொரு கதை கனடாவில் இருக்கும் ஊடகவியலாளர் டி.பி ஜெயராஜ் அண்ணை எழுதியிருக்கிறார்.
வன்னியில் இளைஞர்கள் பலர் ஓடி வந்து கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த கிழவி ஒருவர் “ஏன் தம்பியவை இப்படி ஓடுறியள?”; என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர்கள் “சுமந்திரனுக்கு கிளைமோர் வைக்க திட்டம் போட்டவை என்று இளைஞர்களை பிடிக்க புலனாய்வு பொலிஸ் வந்துகொண்டிருக்கினம்” என்றார்கள்.
அதைக் கேட்ட கிழவி “நீங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்தவர்கள்தானே. உங்களை எப்படி பிடிக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்டாள்.
“உண்மைதான். ஆனால் அதை சொல்லி வெளியில் வர இன்னொரு 20 வருடம் சிறையில் இருக்க வேண்டிவரும் அல்லவா?” என்று இளைஞர்கள் கூறினார்கள்.
“ஆமாம் தம்பியவை. உண்மைதான்” என்று கூறிய கிழவி இப்போது இளைஞர்களின் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறாள்.
குறிப்பு- இந்திய புலனாய்வு தயாரித்த கதைக்கு டி.பி.எஸ். ஜெயராஜ் வசனம் எழுதியுள்ளார். இதனால் பல தமிழ் இளைஞர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

•எத்தனை இடர்கள் வந்தாலும்

•எத்தனை இடர்கள் வந்தாலும்
தமிழ் இனம் தன் உணர்வினை இழந்து விடுவதில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஒன்று, காணாமல்போன உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பிரதமர் இல்லம் முன் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு.
இன்னொன்று, ஈஸ்ட்காம் நகரில் நடைபெற்ற தியாகி முத்துக்குமார் நினைவு நிகழ்வு.
வவுனியாவில் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. இருப்பினும்கூட அவர்களுக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்த பிரிஎவ் அமைப்பினை பாராட்ட வேண்டும்.
கடும் குளிர். அதைவிட கொட்டும் மழை வேறு. இருந்தும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்.
அனைத்து நாடுகளிலும் இருக்கும் தமிழ் மக்களால் நடத்தப்பட வேண்டிய நிகழ்வு இது.
யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்படவில்லை.
இவ்வாறு பல நாடுகளிலும் நடத்தப்படும் நிகழ்வுகள் நிச்சயம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அடுத்து, முத்துக்குமார் நினைவு நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசால் நடத்தப்பட்டது. ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்த முத்துக்குமாரின் ஈகம் நினைவு கூரப்பட்டமை உண்மையிலே பாராட்டப்பட வேண்டியதாகும்.
ஆனால் நடந்து முடிந்த இரண்டு நிகழ்விலும் மிக குறைவான மக்களே கலந்து கொண்டது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ஒருவாரத்திற்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் அடுத்தடுத்து 3 இடங்களில் மக்கள் கூடினார்கள்.
எந்தவொரு அமைப்பு ஏற்பாடும் இன்றி குறுகிய கால இடைவெளியில் வெறும் முகநூல் மூலம் அறிவித்து இந்த ஒன்று கூடல்களை நடத்தியிருந்தனர். இதில் பல தமிழ் மக்கள் ஆர்வமுடன் பங்குபற்றியிருந்தனர்.
இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமக்கான போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்க தயாராகவே இருக்கிறார்கள்.
எனவே பல பிரிவுகளாக பிரிந்து, வெறும் அடையாள நிகழ்வுகளாக இல்லாமல் அனைத்து தமிழ் மக்களையும் பங்கு பற்ற வைப்பதற்கு நிகழ்வு எற்பாட்டாளர்கள் முனைய வேண்டும்.
இல்லையேல் இப்போது வரும் சொற்பமானவர்களும்கூட இனிவரும் காலங்களில் பங்கு பற்றாமல் போய்விடக்கூடிய நிலையே தோன்றும்.

Sunday, January 22, 2017

•இந்திய அரசுக்கு தமிழக மக்கள் சொல்லும் செய்தி!

•இந்திய அரசுக்கு தமிழக மக்கள் சொல்லும் செய்தி!
இதுவரை பொறுத்து பொறுத்து பார்த்த தமிழக மக்கள்
இப்போது இந்திய அரசுக்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளார்கள்.
“இந்தியா தமிழர்களை புறக்கணிக்க நினைத்தால்
தமிழர்கள் நாங்கள் இந்தியாவை புறக்கணிப்போம்”
தெளிவான செய்தியை சொல்லியுள்ளார்கள்.
அதுவும் உறுதியாக சொல்லியுள்ளார்கள்.
இனி பாருங்கள்!
விளைவுகள் வித்தியாசமானவையாக இருக்கும்.