•கிழவியையும் ஓடவிடும் சுமந்திரன் !
(சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு)
ஒரு நாள் காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த யானை ஒன்று “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று பசு ஒன்றிடம் கேட்டது.
அதற்கு அந்த பசு “காட்டில் உள்ள எருமைகளை எல்லாம் பிடிக்க இலங்கை புலனாய்வுதுறை வருகிறது.அதுதான் ஓடுகிறோம்” என்றது.
அதைக் கேட்ட யானை “ நீ எருமை இல்லையே. பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய?”; என்று கேட்டது.
அதற்கு அந்த பசு “ உண்மைதான். ஆனால் நான் எருமை இல்லை பசு என்பதை நிரூபிக்க 20 வருடம் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது.
அதைக் கேட்ட யானையும் பசுவுடன் சேர்ந்து ஓடியது.
இது ஒரு எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் இப்ப இன்னொரு கதை கனடாவில் இருக்கும் ஊடகவியலாளர் டி.பி ஜெயராஜ் அண்ணை எழுதியிருக்கிறார்.
வன்னியில் இளைஞர்கள் பலர் ஓடி வந்து கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த கிழவி ஒருவர் “ஏன் தம்பியவை இப்படி ஓடுறியள?”; என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர்கள் “சுமந்திரனுக்கு கிளைமோர் வைக்க திட்டம் போட்டவை என்று இளைஞர்களை பிடிக்க புலனாய்வு பொலிஸ் வந்துகொண்டிருக்கினம்” என்றார்கள்.
அதைக் கேட்ட கிழவி “நீங்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்தவர்கள்தானே. உங்களை எப்படி பிடிக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்டாள்.
“உண்மைதான். ஆனால் அதை சொல்லி வெளியில் வர இன்னொரு 20 வருடம் சிறையில் இருக்க வேண்டிவரும் அல்லவா?” என்று இளைஞர்கள் கூறினார்கள்.
“ஆமாம் தம்பியவை. உண்மைதான்” என்று கூறிய கிழவி இப்போது இளைஞர்களின் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறாள்.
குறிப்பு- இந்திய புலனாய்வு தயாரித்த கதைக்கு டி.பி.எஸ். ஜெயராஜ் வசனம் எழுதியுள்ளார். இதனால் பல தமிழ் இளைஞர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment