•அதிகாரத்தை கைப்பற்றுவோம்!
மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை. மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் கூறுகிறார்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தனக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
உச்சநீதிமன்றமோ பீட்டாவின் அரவணைப்பில் கிடக்கிறது. அங்கு தமிழக மக்களுக்கு ஒருபோதும் நீதி நியாயம் கிடைக்காது.
அப்படியென்றால் என்னதான் வழி?
தமிழக மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான் ஒரே வழி.
தமிழக மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே வழி.
ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டுமல்ல தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காண ஒரே வழி அதிகாரத்தை கைப்பற்றுவதே.
எனவே மக்களின் போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாக மாறட்டும்.
இதுவரை வெறுமனே கூட்டம் கூடி கோசம் போட்ட இளைஞர் கூட்டம் தற்போது இந்திய அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்தள்ளது.
மதுரையில் ரயில் மறிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரயில் மறிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன.
போராட்டம் மகிழ்சிகரமானது என்றார் காரல் மாக்ஸ். ஆம். அதை தமிழக மக்கள் இன்று உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment