Sunday, January 22, 2017

•அடக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்!

•அடக்குமுறை இருக்கும்வரை
அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்!
•ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
•தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என அரசு மிரட்டியது
•பொலிசார் காட்டு மிராண்டித் தனமாக தடியடி நடத்தினர்
ஆனால் மக்கள்
தடையை உடைத்தனர்
நீதிமன்ற உத்தரவை மீறினர்
ஜல்லிக்கட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.
வெறும் 13 இடங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு இம்முறை இதுவரை 30 க்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர்.
இந்திய அரசும் அதன் உச்ச நீதிமன்றமும் தம்மை வஞ்சிப்பதாக தமிழக மக்கள் உணருகின்றனர்.
அதனால்தான் எந்த பெரிய கட்சிகளோ அல்லது பெரிய தலைவர்களோ முன்வராத நிலையிலும் மக்கள் தாமாகவே இறங்கி போராடுகின்றனர்.
அடக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்.
•போராடாத எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை.
•போராடிய எந்த இனமும் விடுதலை பெறாமல் விட்டதில்லை.

No comments:

Post a Comment