•சம்பந்தர் தன்னை மேய்ப்பனாக நினைக்கலாம்
ஆனால் கிழக்கு மாகாண மக்கள் மாடுகள் இல்லை.
ஆனால் கிழக்கு மாகாண மக்கள் மாடுகள் இல்லை.
அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமைக்கு
காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்காமைக்கு
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படாமைக்கு
பொங்கியெழாத சம்பந்தர் பொங்கலுக்கு பொங்க வென்று
19.01.17 யன்று மட்டக்கிளப்பு வருகிறார்.
இதுவரை பொங்கல் கொண்டாடாத தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது ஏன் கொண்டாடுகிறது?
பொங்கல் கொண்டாட ஏன் வெளிநாடுகளில் இரகசியமாக கோடிக் கணக்கான ரூபா பணம் திரட்டுகிறது?
யாழ்ப்பாணத்தில் இருந்து எதற்காக பலரையும் வானில் அழைத்து வர திட்டம் போடப்படுகிறது?
மக்கள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் நிலையில் பல கோடி ரூபா செலவில் எதற்கு பொங்கல் விழா நடத்த முயற்சிக்கின்றனர்?
21.01.17 யன்று நடைபெற இருக்கும் எழுக தமிழைக் குழப்புவதற்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த பொங்கல் விழாவை செய்கிறது.
மாணவர்கள் எழுக தமிழில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக வேண்டுமென்றே 21.01.17 யன்று பாடசாலை நடத்த உத்தரவு போட்டுள்ளது.
இத்தனை காலமும் சிங்கள அரசும் இந்திய அரசுமே எழுக தமிழைக் குழப்ப முயற்சி செய்தன.
இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பு அவ் அரசுகளின் விருப்பத்தை நிறைவேற்ற நேரில் களத்தில் இறங்கியுள்ளது.
கிழக்குமாகாண மக்கள் தாங்கள் மாடுகள் அல்ல என்பதையும் தங்களை ஏமாற்ற முடியாது என்பதையும் காட்ட வேண்டிய வேளை வந்தவிட்டது.
பிய்ந்த செருப்புகள் வரவேற்க தயாராகட்டும்
கூழ் முட்டைகள் சரமாரியாக உடையட்டும்
விளக்குமாத்து பூசை நடக்கட்டும்.
இனி சம்பந்தர் கும்பல்
கிழக்கு மாகாண பக்கம் தலைகாட்டவே கூடாது!
No comments:
Post a Comment