Tuesday, January 31, 2017

•தனக்குதானே பட்டம் கொடுத்து மகிழும் சம்பந்தர் அய்யா!

•தனக்குதானே பட்டம் கொடுத்து மகிழும் சம்பந்தர் அய்யா!
திருகோணமலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் சம்பந்தர் அய்யாவின் கோவிலாகும்.
சம்பந்தர் அய்யா வெளிநாடு வரும்போதெல்லாம் தமிழர் பிரச்சனைகளுக்காக செலவு செய்த நேரத்தைவிட இந்த காளி அம்மன் கோவிலுக்கு நிதி சேகரிக்க செலவு செய்த நேரமே அதிகம் ஆகும்.
இந்த காளி அம்மனே கனவில் வந்து தனக்கு சொன்னதாக கூறி துரைரட்ணசிங்கத்திற்கு எம்.பி பதவியை வழங்கினார்.
இப்போது எம்.பி துரைரட்ணசிங்கம் இந்த காளி அம்மன் கோவில் பெயரில் “ இறை பணிச் செம்மல்” என்ற பட்டத்தை சம்மந்தர் அய்யாவுக்கு வழங்கி உள்ளார்.
இந்த காளி கோவிலில் பல லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட மண்டபம் சம்பந்தர் அய்யாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பல்லாயிரம் ரூபா செலவில் மகா கும்பாபிசேகமும் சம்பந்தர் அய்யா முன்னிலையில் நடந்துள்ளது.
சம்பந்தர் அய்யாவுக்கு வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
சம்பந்தர் அய்யா கோவில் கட்டிய கிழக்கு மாகாணத்திலேதான் அதிக அளவிலான விதவைகள் உதவி இன்றி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்தவாரம் காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை போய் சந்தித்து ஆறுதல் கூறக்கூட சம்பந்தர் அய்யா விரும்பவில்லை.
ஆனால் பல லட்சம் ரூபா செலவில் கோவில் கட்டி அந்த கோவிலின் பெயரால் தனக்கு தானே பட்டம் சூட்டி மகிழ்கிறார் சம்பந்தர் அய்யா.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய சம்பந்தர் அய்யாவோ கோவில் கட்டி சேவை செய்கிறார்.
காளி அம்மனில் நம்பிக்கை வைப்பதோ அல்லது கோவில் கட்டி மகிழ்வதோ சம்பந்தர் அய்யாவின் சொந்த விருப்பமாக இருக்கலாம்.
அதை அவர் செய்ய விரும்பினால் தாராளமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் செய்யட்டும்.
மாறாக தனது சொந்த விருப்பங்களுக்காக தமிழ் இனத்தை படுகுழியில் தள்ளும் வேலையை செய்ய அனுமதிக்க முடியாது.

No comments:

Post a Comment