Sunday, July 29, 2018

தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி?

தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி?
தமிழ்நாட்டில் பத்தாயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக
சுப்பிரமணியசுவாமி அய்யர் கூறுகிறார்.
அதில் ஒருவரை தமிழ்நாட்டு பொலிசார் கைது செய்துவிட்டார்கள்.
இப்போது அனைவர் முன் எழும் கேள்வி என்னவென்றால்
எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் இந்த சமூகவிரோதியை
தமிழக பொலிசார் எப்போது சுட்டுக் கொல்லப் போகிறார்கள்?
அப்புறம் எப்போது சுட்டுக்கொல்லப்பட்ட சமூகவிரோதிக்கு
10 லட்சம் ரூபா நிதி வழங்கப் போகிறார்கள்?
அதுசரி,
சத்துணவு முட்டையில் 1100 கோடி ரூபா ஊழல் என்கிறார்களே
அவர்கள் சமூகவிரோதிகள் இல்லையா?
அவர்களை சுட்டுக் கொல்வது யார்?

அடேய்! ஏலுமெண்டால் எங்கட “தலை” யிலை கைவையுங்கடா பார்ப்பம்!

அடேய்!
ஏலுமெண்டால் எங்கட “தலை” யிலை கைவையுங்கடா பார்ப்பம்!
“புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அழித்தது தவறு. அவர்களின் போராட்டம் நியாயமானது” என்று எங்கட “தல” சம்பந்தர் அய்யா கூறியிருக்கிறார்.
ஏலுமெண்டால் விஜயகலாவின் பதவியை பறித்தது போல் எங்கட “தலை” யின்ட பதவியை பறியுங்கடா பார்ப்பம்!
அல்லது, விஜயகலாவை விசாரணை செய்வதுபோல் எங்கட “தலை” யை விசாரணை செய்யுங்கடா பார்ப்பம்!
அல்லது, பிரபாகரன் படத்தை கொளுத்தியது போன்று எங்கட “தலை” யின்ரை படத்தை கொளுத்துங்கடா பார்ப்பம்!
அல்லது, விஜயகலாவுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறியதுபோல் எங்கட “தலை” க்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறுங்கடா பார்ப்பம்!
என்ன? எங்கட “தலை” யிலை கை வைத்தால் இந்தியா தலையிடும் என்று பயப்படுகிறீர்களா?
அல்லது, எங்கட “தலை” யிலை கை வைத்தால் அமெரிக்க தூதுவர் கேட்பார் என்று அச்சப்படுகின்றீர்களா?
பெட்டைப்பிள்ளையிட்ட உங்கட வீரத்தைக் காட்டுறீங்கயேடா. முடியுமென்டால் எங்கட “தலை” யிட்ட உங்கட வீரத்தைக் காட்டுங்கடா பார்ப்பம்!
குறிப்பு- ஏதோ எம்மால முடிந்தது. பத்த வைச்சிரூக்கு. பத்துதா என்று பார்ப்பம்.

அகதி மாணவி மருத்துவம் படிக்க பிரான்ஸ் அனுமதிக்கிறது- ஆனால் இந்தியா மறுக்கிறது ஏன்?

•அகதி மாணவி மருத்துவம் படிக்க
பிரான்ஸ் அனுமதிக்கிறது- ஆனால்
இந்தியா மறுக்கிறது ஏன்?
பிரான்ஸ் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக ஈழ தமிழ் அகதி மாணவி ஒருவர் டாக்டராக தெரிவாகியுள்ளார்.
பிரான்ஸ் நாடு தமிழர்களின் தொப்புள்கொடி நாடு இல்லை. பிரான்சில் ஏழரைக்கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழரும் இல்லை.
எல்லாவற்றுக்கும்மேலாக பிரான்ஸ் தன்னைத்தானே “வந்தாரை வாழவைக்கும் நாடு” என்று பெருமை பேசியதும் இல்லை.
இருந்தும் அகதியாக வந்த ஈழத் தமிழ் மாணவி மருத்துவம் படித்து டாக்டராக வருவதற்கு அனுமதித்துள்ளது.
ஆனால் எமது தொப்புள்கொடி உறவு நாடு என சொல்லிக்கொள்ளும் இந்தியா அகதி மாணவர்கள் உயர் கல்வி பெறுவதை மறுக்கிறது.
அகதிமுகாமில் இருந்த மாணவியான நந்தினி என்பவர் மருத்துவம் படிப்பதற்கான புள்ளிகளைப் பெற்றிருந்தும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டது.
ஈழத் தாய் என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையாரே அகதி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தடை செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த அகதி மாணவிக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மோடி அரசு இந்து அகதிகளான ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை.
குடியுரிமை வழங்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. இந்த அகதிகளுக்கு உயர் கல்வி வாய்ப்பையாவது வழங்கியிருக்கலாமே?
ஈழத் தமிழ் தலைவர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் பற்றி அக்கறை கொள்வதில்லை.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக தலைவர்களும் தங்கள் மண்ணில் இருக்கும் இந்த அகதிகள் குறித்து கவலைப்படுவதில்லை.
இந்த அகதிகள் தமிழ்நாட்டிற்கு செல்லாமல் வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு அகதியாக சென்றிருந்தால் இந்நேரம் குடியுரிமையும் கிடைத்திருக்கும். பிள்ளைகளும் நல்ல கல்வியும் பெற்றிருப்பார்கள்.
குறிப்பு- மூன்று கேள்விகள்
(1) தம் மண்ணில் இருக்கும் அகதிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக்கொடுக்காத தமிழக தலைவர்கள் ஈழத் தமிழருக்கு தமிழீழத்தை பெற்றுக்கொடுப்பார்கள் என்று எப்படி நம்புவது?
(2) தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் காசி ஆனந்தன் அய்யாவின் இரண்டு மகள்களுக்கும் மருத்துவ கல்வி வாய்ப்பை பெற்றுக்கொடுத்த வைகோ ஏன் மற்ற அகதி மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை?
(3) இந்து தமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று கூறும் காசிஆனந்தன் அய்யா ஏன் இந்து அகதி மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கு மோடி உதவில்லை என்று கூறுவாரா?

பெரியார் திடலும்

பெரியார் திடலும்
இன்னொரு சங்கரமடமாகி விட்டது.
வீரமணியும்
இன்னொரு சங்கராச்சாரியார் ஆகிவிட்டார்.
இதில
சுயமரியாதையாவது ?
வெங்காயமாவது ?

கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம் இந்தியாவில் ஈழ அகதி என்னவாகலாம்?

கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம்
இந்தியாவில் ஈழ அகதி என்னவாகலாம்?
கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம்.
இந்தியாவில் மிஞ்சிப் போனால் ஈழ அகதி 
சுப்பர் சிங்கர் போட்டியில் பாட்டுப் பாடலாம்.
அதுவும் சட்டச் சிக்கல் வரும் என்று கூறி
பரிசு தருவதை தவிர்த்து விடுவார்கள்.
இதுதானே இந்தியாவில் ஈழ அகதி நிலை?
இதை யாராலும் மறுக்க முடியுமா?
கனடாவில் அண்மையில் நடந்த தேர்தலில்
இரண்டு தமிழர்கள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகதியாக கனடாவுக்குச் சென்ற அந்த இரு ஈழத்தமிழர்களும்
குடியுரிமை பெற்றதோடு எம்.பி யாகவும் ஆகியுள்ளனர்.
ஆனால்,
அதே காலப்பகுதியில் இந்தியாவுக்கு அகதியாக சென்றவர்கள்
இன்னும் அகதியாகத்தானே வாழ்கின்றனர்.
பொதுவாக ஒருவர் எந்த நாட்டில் பிறக்கின்றாரோ
அவருக்கு அந்த நாடு குடியுரிமை வழங்குவது மரபு.
ஆனால் இந்தியாவில் பிறந்த அகதி குழந்தைகளுக்கும்கூட
குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
அதேவேளை,
பாகிஸ்தானில் இருந்துவந்த இந்து அகதிகளுக்கு
இந்திய குடியுரிமை வழங்கப்படுகின்றது.
ஈழ அகதிகளும் பெரும்பாலானவர்கள் இந்து அகதிகள்தான்.
ஆனால் ஈழ இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.
இங்கு ஆச்சரியம் என்னவெனில்,
இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகளுக்கு
இலங்கைக் குடியுரிமை இலங்கை அரசால் வழங்கப்படுகிறது.
சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம்கூட
இந்திய அரசுக்கு ஈழ தமிழ் அகதிகள் மேல் இல்லை..
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை,
அதிகாரிகளினால் அவர்களுக்கு இருக்கும் தொந்தரவுகளையாவது நீக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
கனடாவில் ஒரு அகதி தமிழன் எம்.பி யாக வரமுடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமை விட்டே
சுதந்திரமாக வெளியே வர முடியவில்லை.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் கணக்கெடுப்பில்
அகதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இல்லையேல் பதிவு ரத்து செய்யப்படும்.
இந்த கணக்கு எடுக்கும் தாசில்தார் அதிகாரிகளின்
தொந்தரவு பொறுக்காமல் மதுரை அகதிமுகாமில் ஒருவர்
கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார்.
ஏழு பிள்ளைகளின் தந்தை மின்சாரக் கம்பியை பிடித்து தற்கொலை செய்கின்றார் எனில்,
அகதிகளுக்கு அதிகாரிகளின் தொல்லை எந்தளவு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்ததாக சிலப்பதிகாரம் படிக்கிறோம்.
ஆனால் அதே மதுரையில் ஈழ அகதி தமிழ் அதிகாரியின் தொல்லை தாங்காமல் தன்னையே எரித்து செத்தார் என்றுதான் எதிர்கால வரலாறு படிக்கப் போகிறோம்.

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்துவிட முடியாது!

ஓடாத மானும்
போராடாத இனமும்
வாழ்ந்துவிட முடியாது!
வரலாறு எப்போதும்
வென்றவனையும் பதிவு செய்யும்.
தோற்றவனையும் பதிவு செய்யும்.
ஆனால் ஒருபோதும்
போட்டியிடாதவனை பதிவு செய்யாது.
காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம்
500வது நாளை எட்டியுள்ளது.
தமது உறவுகளை இவர்கள் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ
ஆனால் வரலாற்றில் இவர்கள் போராட்டம் நிச்சயம் இருக்கும்
இது ஒரு நடிகர் படம் என்றால்
நிச்சயம் கட்அவுட் வைத்து கொண்டாடியிருப்பார்கள்
ஆனால் இது உறவுகளை இழந்தவர்களின் வலி
அவர்களுக்கு கோயில் வாயிலில் இருந்து
கடவுளிடம் முறையிடவும் உரிமை இல்லையா?
என்ன கொடுமை இது?
இராணுவம்கூட போராட அனுமதிக்கிறது.
ஆனால் கோயில் நிர்வாகம் தடுக்கிறதே
சிங்கள அமைச்சர் வந்தால் ஓடிச் சென்று வரவேற்கும் நிர்வாகம்
இராணுவ தளபதிகள் வந்தால் கைகட்டி வரவேற்கும் நிர்வாகம்
போராடும் வயதான பெண்மணிகள் வந்தால் தடுப்பது ஏன்?
முருகா!
நீகூட சூரனை போராடிதானே கொன்றாய்
அப்படியிருக்க உன் வாசலில் போராடும் தாய்மாருக்கு
இடம் இல்லை என்றுகூற இடையில இவனுகள் யார்?
உன் கையில் இருக்கும் வேலைக் கொடு
இந்த கும்பலை குத்தி கிழித்து சங்காரம் செய்ய வேண்டும்.
குறிப்பு- பக்தர்களுக்கு ஒரு கேள்வி
செல்வசந்நிதி முருகன் கோவிலில் பார்ப்பண ஜயர் பூசை செய்வதில்லை. சமஸ்கிருத மந்திரமும் சொல்வதில்லை.
கதிர்காம முருகன் கோவிலில் பார்ப்பண ஜயர் பூசை செய்வதில்லை. அங்கும் சமஸ்கிருத மந்திரம் சொல்வதில்லை.
நல்லூர் முருகன் கோவிலில் மட்டும் எப்படி பார்ப்பண ஜயர் வந்தார்கள்? அவர்கள் ஏன் சமஸ்கிருத மந்திரம் சொல்கிறார்கள்?
தமிழ் கடவுளுக்கு தமிழில் வழிபடுதல்தானே முறை. அப்படித்தானே ஆரம்ப காலங்களில் இருந்திருக்கும். இடையில் வந்த இந்த பார்ப்பண ஜயர்களை விரட்ட முடியாதா?

தாய்லாந்து அரசு மீட்கிறது இந்திய அரசு மீட்க வில்லை. என்ன காரணம்?

தாய்லாந்து அரசு மீட்கிறது
இந்திய அரசு மீட்க வில்லை.
என்ன காரணம்?
குகையில் மாட்டிக்கொண்ட 12 பேரையும் தாய்லாந்து அரசு மீட்டுள்ளது.
தாய்லாந்து அரசு தான் 2020ல் வல்லரசு ஆகுவேன் என்று கூறியதில்லை.
தன்னிடம் உலகில் நான்காவது பெரிய கப்பற்படை, விமானப்படை இருப்பதாக பெருமை பேசியதில்லை.
இருந்தாலும் தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி குகையில் மாட்டிக்கொண்ட தனது 12 குடிமக்களையும் காப்பாற்றியுள்ளது.
ஆனால் ஓகிப்புயல் வந்தபோதும்சரி, கொங்கினி தீ விபத்தின் போதும்சரி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.
ஓகி புயல் எற்பட்டு 1015 பேரைக் காணவில்லை என்று தமிழ் மக்கள் முறையிட்டபோதும் 11 நாட்களாக இந்திய அரசு அவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன்னிடம் நான்காவது பெரிய கப்பற்படை இருப்பதாக பெருமை பேசும் இந்திய அரசு அதில் ஒரு கப்பலைக்கூட தமிழனை தேட அனுப்பவில்லை.
சிறந்த விமானப்படை வைத்து சுதந்திரதினத்திற்கு பூ சொரிந்து சாகசம் காட்டும் விமானத்தில் ஒன்றைக்கூட அனுப்பவில்லை.
கடலில் தமிழன் பிணம் மிதந்தது. அதைக்கூட புயலில் தப்பி வந்த மீனவர்களே மீண்டும் சென்று எடுத்து வந்தார்கள்.
மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமிழக மீனவனுக்கு கொடுக்க இந்திய அரசு தயாரில்லை.
மாட்டுக்கு மருத்துவமனை, அம்புலன்ஸ், இன்சுரன்ஸ், மற்றும் விசேட சட்டங்கள் வழங்கிய இந்திய அரசு, 1015 தமிழனைக் காணவில்லை என்றாலும் மௌனமாக இருக்கிறது.
செவ்வாய்க்கு ராக்கட் விட்ட இந்திய அரசு தமிழனை மீட்க ஒரு கப்பலை விடமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
இந்திய அரசு தமிழனை தனது குடிமகனாக கருதவில்லை என்றுதானே அர்த்தம்.
இந்திய அரசு தமிழனை இந்தியனாக மட்டுமன்றி ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
அப்படியிருக்க தமிழன் மட்டும் எதற்கு “நான் இந்தியன்” என்று பெருமையாக மார் தட்டுகிறான்?