தாய்லாந்து அரசு மீட்கிறது
இந்திய அரசு மீட்க வில்லை.
என்ன காரணம்?
இந்திய அரசு மீட்க வில்லை.
என்ன காரணம்?
குகையில் மாட்டிக்கொண்ட 12 பேரையும் தாய்லாந்து அரசு மீட்டுள்ளது.
தாய்லாந்து அரசு தான் 2020ல் வல்லரசு ஆகுவேன் என்று கூறியதில்லை.
தன்னிடம் உலகில் நான்காவது பெரிய கப்பற்படை, விமானப்படை இருப்பதாக பெருமை பேசியதில்லை.
இருந்தாலும் தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி குகையில் மாட்டிக்கொண்ட தனது 12 குடிமக்களையும் காப்பாற்றியுள்ளது.
ஆனால் ஓகிப்புயல் வந்தபோதும்சரி, கொங்கினி தீ விபத்தின் போதும்சரி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.
ஓகி புயல் எற்பட்டு 1015 பேரைக் காணவில்லை என்று தமிழ் மக்கள் முறையிட்டபோதும் 11 நாட்களாக இந்திய அரசு அவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன்னிடம் நான்காவது பெரிய கப்பற்படை இருப்பதாக பெருமை பேசும் இந்திய அரசு அதில் ஒரு கப்பலைக்கூட தமிழனை தேட அனுப்பவில்லை.
சிறந்த விமானப்படை வைத்து சுதந்திரதினத்திற்கு பூ சொரிந்து சாகசம் காட்டும் விமானத்தில் ஒன்றைக்கூட அனுப்பவில்லை.
கடலில் தமிழன் பிணம் மிதந்தது. அதைக்கூட புயலில் தப்பி வந்த மீனவர்களே மீண்டும் சென்று எடுத்து வந்தார்கள்.
மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமிழக மீனவனுக்கு கொடுக்க இந்திய அரசு தயாரில்லை.
மாட்டுக்கு மருத்துவமனை, அம்புலன்ஸ், இன்சுரன்ஸ், மற்றும் விசேட சட்டங்கள் வழங்கிய இந்திய அரசு, 1015 தமிழனைக் காணவில்லை என்றாலும் மௌனமாக இருக்கிறது.
செவ்வாய்க்கு ராக்கட் விட்ட இந்திய அரசு தமிழனை மீட்க ஒரு கப்பலை விடமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
இந்திய அரசு தமிழனை தனது குடிமகனாக கருதவில்லை என்றுதானே அர்த்தம்.
இந்திய அரசு தமிழனை இந்தியனாக மட்டுமன்றி ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
அப்படியிருக்க தமிழன் மட்டும் எதற்கு “நான் இந்தியன்” என்று பெருமையாக மார் தட்டுகிறான்?
No comments:
Post a Comment