•மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?
தமிழ் மக்களுக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். பல பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதைவிட பல தொலைகாட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், இணைய ஊடகங்கள் இருக்கின்றன.
இருந்தும் மக்கள் தங்கள் பிரச்சனைகளை எனது முகநூலில் எழுதும்படி கேட்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்?
மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமல் அவர்களுக்கு உதவி செய்யாமல் தங்கள் நலன்களை மட்டும் கவனித்துக்கொள்கின்றனர் என்றுதானே அர்த்தம்.
பொலிஸ் லஞ்சம் வாங்குவதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பொலிஸ் லஞ்சம் வாங்குவது அதிசயம் இல்லை. அவர்கள் வாங்காவிட்டால்தான் அதிசயம்.
ஏனெனில் மக்கள் பிரதிநிகளான அமைச்சர்களே லஞ்சமும் ஊழலும் செய்யும்போது அவர்களுக்கு காவல் காக்கும் பொலிஸ் லஞ்சம் வாங்காமல் இருக்குமா?
பொதுவாக வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் பொருளாதார உதவி கேட்டே தாயகத்தில் இருந்து செய்திகள் வரும்.
ஆனால் எனக்கு மட்டும் தங்கள் பிரச்சனைகளை எனது முகநூலில் எழுதும்படி கேட்டு வருகின்றது.
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்த ஊடகமும் நடத்த வில்லை. இருந்தும் பலர் தங்கள் பிரச்சனைகளை எனக்கு எழுதி வருகின்றனர்.
உதாரணமாக,
நேற்றையதினம் தங்கள் ஊரைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸ் அடித்து மருத்துமனையில் அனுமதித்தது என்றும் அதன் பின் அவரைக் காணவில்லை என்றும் பயமாக இருக்கிறது. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று ஒருவர் கேட்டு எழுதியிருக்கிறார்.
அதேபோன்று இன்னொருவர், தமது ஊரில் முன்பள்ளி பாடசாலைக்கு அணை கட்டியதாகவும் அதை ஒரு ரவுடி வந்து உடைத்து விட்டதாகவும் இதுபற்றி பொலிசில் முறைப்பாடு செய்தாலும் ஏற்கிறார்கள் இல்லை என்று எழுதியுள்ளார்.
இப்படி பல பிரச்சனைகள் தினமும் எழுதுகிறார்கள். இவை எல்லாம் எங்கள் பிரதிநிதிகளால் தீர்க்கக்கூடிய பிரச்சனைகள்.
இருந்தும் லண்டனில் இருக்கும் எனக்கு அவர்கள் எழுதுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
என்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் என்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment