•சுமந்திரனின் படிப்பினைகள்
அல்லது கற்றுக்கொண்ட பாடங்கள்!
அல்லது கற்றுக்கொண்ட பாடங்கள்!
விஜயகலா- "மீண்டும் புலிகளை உருவாக்குவோம் "
சம்பந்தர் அய்யா- "விஜயகலா கூறியது தவறு. கண்டிக்கிறேன்".
சுமந்திரன்- "விஜயகலா கூறியதில் தவறு இல்லை. மீண்டும் ஆயுதங்களுடன் வந்தால்தான் தீர்வு தருவார்கள்."
எமது தமிழ் தலைவர் தேர்தல் நெருங்கும் காலங்களில் கொஞ்சம் உண்மை பேசுவது வழக்கம்தான்.
ஆனால் சுமந்திரன் இந்தளவு விரைவாக ஒரு உண்மையை ஒத்துக்கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
கடந்த வருடம், புலிகள் பயங்கரவாதிகள் என்றார். ஆயுதம் ஏந்தியவர்கள் பலரை சுட்டுக்கொன்றதைவிட கண்ட பலன் என்ன என்று கேட்டார்.
இந்த வருடம் “புலிகளை மீண்டும் உருவாக்குவோம்” என்று விஜயகலா கூறியது தவறு இல்லை என்கிறார்.
அதுமட்டுமன்றி, ஆயுதம் ஏந்தியவர்களின் காலத்தில் தருவதற்கு முன்வந்த தீர்வுகளைக்கூட அரசு இப்போது தர முன்வரவில்லை என்கிறார்.
அப்படியென்றால் மீண்டும் ஆயுதங்களுடன் வந்தால்தான் தீர்வு தருவார்களா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
ஆயுதம் ஏந்தியவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி தேர்தல் பாதையில் செல்பவருமான சுமந்திரனே இப்படி கூறியிருக்கிறார்.
அவர் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொண்டதுடன் அதை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுவும் சிங்கள மக்கள் முன் இதை கூறியிருக்கிறார். அதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தை மறுப்பவர்கள், தேர்தல் பாதையை முன்னெடுப்பவர்கள் இனி என்ன கூறப்போகிறார்கள்?
குறிப்பாக இந்தியாவும் அதன் விசுவாசிகளும் என்ன கூறப்போகிறார்கள்?
No comments:
Post a Comment