•கதையின் கதை
எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து “நிற்க நிழல் வேண்டும்” என்னும் நாவலை எழுதியிருந்தார்.
அதில் அவர் இந்திய ராணுவத்தின் அக்கிரமங்கள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் ஈழப் போராளிகளை மட்டும் மோசமாக சித்தரிந்திருந்தார்.
குறிப்பாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி தனது ஆசான்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தார்.
இவருடைய இந்த கதை எப்படி பிறந்திருக்கும் என்பதை கற்பனையாக வைத்து “கதையின் கதை” என்னும் சிறுகதையை மருத்துவர் தம்பிராசா எழுதியிருந்தார்.
வாஸந்தியின் “நிற்க நிழல் வேண்டும்” நாவலை கல்கி இதழ் தொடராக பிரசுரம் செய்தது.
அதேபோல் டாக்டர் தம்பிராசா அவர்களின் “கதையின் கதை” கீற்று இணைய தளத்தில் பிரசுரம் செய்யப்பட்டது.
“மவுண்ட்ரோட் பிரம்மா” என்று “இந்து” ஆசிரியர் ராம் அவர்களையே தம்பிராசா தனது கதையில் குறிப்பிடுகிறார்.
“இந்து” ராம் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இலங்கைக்கு விஜயம் செய்து இந்தியாவுக்காக பல வேலைகள் செய்தவர்.
அப்போது அவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன் அவர்களையும் சந்தித்து ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கு சாதகமான கருத்துக்கள் பெற முயற்சி செய்தார்.
இதையெல்லாம் டாக்டர் தம்பிராசா அவர்கள் நேரிடையாகவே கண்டிருக்கிறார். அவதானித்திருக்கிறார்.
எனவே இந்திய அரசை நியாயப்படுத்தி வாஸந்தி எழுதிய நாவலின் பின்னணியில் இந்து ராம் இருந்திருப்பார் என்பது நம்பக்கூடியதாகவே இருக்கிறது.
அதுமட்டுமல்ல, போர்பஸ் ஊழலுக்காக ராஜிவ் காந்தியை மும்முரமாக எதிர்த்து வந்து இந்து ராம் அதே ராஜிவ் செய்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்தார்.
அதுமட்டுமன்றி ஒருபுறம் இந்திய அரசை ஆதரித்துக்கொண்டு மறுபுறம் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராடிய விடுதலைப் புலிகளுடன் உறவு வைத்திருந்திருக்கிறார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராசனுக்கு தனது பத்திகை அடையாள அட்டை வழங்கியிருக்கிறார் “இந்து” ராம்.
இவர் வழங்கிய அடையாள அட்டையின் மூலமே பிரமதர் வி.பி.சிங் பங்குபற்றிய மெரினா கடற்கரைக் கூட்டத்தில் சிவராசன் பங்கு பற்றியிருக்கிறார் என்று விசாரணைகளில் தெரிய வந்தது.
ஆனாலும் பேரறிவாளன் பற்றரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 27 வருடங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கும் சிபிஜ அடையாள அட்டை வழங்கிய “இந்து” ராமை கைது செய்யவுமில்லை. விசாரணை செய்யவுமில்லை.
இங்கு வேடிக்கை என்னவெனில் சிவராசனுக்கு அடையாள அட்டை வழங்கி உதவி செய்த “இந்து” ராம் பற்றரி வாங்கிகொடுத்த பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்று எழுதி வருவது.
குறிப்பு- மருத்துவர் தம்பிராசா எழுதிய “கதையின் கதை” பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment