•மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்லை.
ஈழ அகதி மட்டும் இந்தியாவிலிருந்து திரும்ப முடியவில்லையே!
ஈழ அகதி மட்டும் இந்தியாவிலிருந்து திரும்ப முடியவில்லையே!
இந்த வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இந்திய பிரதமரோ இல்லை இலங்கை பிரதமரோ செய்யவில்லை.
மாறாக தமிழ்தேசியகூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் மிக்க மகிழ்வுடன் அறிவித்துள்ளார்.
பலாலியில் இருந்து விமான சேவை நடைபெறுவதை யாழ் இந்திய தூதர் வரவேற்கலாம்.
தமிழர் தலைவரான சுமந்திரன் ஏன் மகிழ்வுடன் அறிவிக்கின்றார். இதனால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன?
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் தாங்கள் நாடு திரும்ப உதவியாக கப்பல் சேவை நடத்தும்படி கேட்கின்றனர்.
ஆனால் தமிழர் தலைவர் சுமந்திரனோ விமான சேவை நடத்த ஏற்பாடு செய்கிறார்.
பரவாயில்லை. குறைந்த பட்சம் இந்த விமான சேவையில் அகதிகள் திரும்புவதற்காவது அவர் ஏதாவது ஒழுங்கு செய்வாரா?
உண்மையில் அவருக்கு இந்த அகதிகள் பிரச்சனை தெரியாதா அல்லது தெரிந்தும் திமிராக செயற்படுகிறாரா?
ஏனெனில் அதிரடிப்படை புடைசூழ வந்து ஜஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காட்டும் அக்கறையை தனக்கு வோட்டு போட்ட தமிழ் மக்கள் மீது காட்டுவதில்லை.
ஆனால் அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் இந்த தமிழ்மக்கள்தான் வோட்டு போட வேண்டும்.
மாறாக அவர் அருகில் இருக்கும் அதிரடிப்படையினரோ அல்லது யாழ் இந்திய தூதரோ வோட்டுப் போட முடியாது.
No comments:
Post a Comment