•குருக்கள் மடத்துப் பையன்
கடந்த சனிக்கிழமை (14.07.2018) மாலை 5 மணிக்கு லண்டன் ஈஸ்ட்காம் நகரில் “குருக்கள் மடத்துப் பையன்” நூல் வெளியீடு நடைபெற்றது.
பஷீர் அவர்களால் எழுதப்பட்ட இந் நூல் தேசம் ஜெயபாலன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது.
தோழர் சிவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதலில் ஜெயபாலன் அவர்கள் தான் ஏன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தேன் என்பது பற்றி பேசினார்.
அடுத்து இந் நூல் பற்றி முத்து அவர்களும் நித்தியானந்தன் அவர்களும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நூல் அசிரியர் பஷீர் அவர்கள் பேச்சாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
அதன் பின்னர் பார்வையாளர்களின் உரையாடல் நேரத்தில் பௌசர் அவர்கள் சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந் நூல் குருக்கள் மடம் என்னும் இடத்தில் புலிகளால் கொல்லப்பட்ட 69 முஸ்லிம்கள் பற்றிய விபரங்களை கொண்டது.
முஸ்லிம்களின் படுகொலை பற்றி ஒரு முஸ்லிமால் எழுதப்பட்ட இந் நூல் சுகன் என்னும் தமிழரால் பதிப்பிக்கப்பட்டு ஜெயபாலன் என்னும் தமிழரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழர் படுகொலை பற்றி ஒரு தமிழரால் எழுதப்படும் நூல் ஒரு முஸ்லிமால் பதிப்பிக்கப்பட்டு ஒரு முஸ்லிமால் வெளியிடப்படுமா?
அந் நிலை வரவேண்டும். அப்போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒரு முஸ்லிம் டெயிலரை பொலிசார் கைது செய்தபோது முஸ்லிமிற்காகவே புலிகள் பொலிசாரை தாக்கினர் என்றும் ஆனால் இரண்டு மாதத்திற்குள் புலிகள் முஸ்லிம்கள் மோதலாக பின்னர் அது எப்படி மாற்றப்பட்டது என்பதையும் நன்கு ஆராய வேண்டும் என பஷீர் அவர்கள் குறிப்பிட்டார்.
அதேபோன்று முதல் முதல் முஸ்லிம்களை தாக்கியவர்கள் புலிகள் அல்ல என்றும் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினரே என்றும் பொளசர் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த தமிழ் முஸ்லிம் படுகொலைகள் பற்றி நிறைய நூல்கள் வரவேண்டும்.
நடந்த சம்பவங்கள் பற்றி இரு சமூகங்களும் பேச வேண்டும். அதன் மூலமே நல்லிணக்கம் ஏற்பட முடியும்.
இவ் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தமது செல்வாக்கினை செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment