கோத்தபாய ராஜபக்ச- என்ன சம்பந்தர் மாத்தயா, சுகமா? அடுத்தமுறை என்னை ஜனாதிபதி யாக்கினால் என்ன?
சம்பந்தர் அய்யா- கோத்தா தம்பி உம்மை ஜனாதிபதி ஆக்கிறதில எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கட சனங்கள் இன்னும் உங்கள் கொலைகளை மறக்கவில்லை.
கோத்தபாயா ராஜபக்ச- போரில தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறீங்கள். போரில பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரியை ஜனாதிபதி ஆக்கிறீங்க. என்னை மட்டும் ஆக்கக்கூடாதா?
சம்பந்தர் அய்யா- உங்களையும் ஆக்கலாம்தான். ஆனால் அதை இந்தியா சொல்ல வேணும். ஒவ்வொரு முறையும் இந்தியா கைகாட்டுற ஆளைத்தான் நாங்கள் ஆதரிப்போம்.
கோத்தபாய ராஜபக்ச- இந்தியா சொல்லித்தானே உங்கட ஆட்களை நாம் கொலை செய்தோம். அப்ப இந்தியா என்னை ஆதரிக்கலாம்தானே?
சம்பந்தர் அய்யா- ஓமோம் ஓமோம். ஆனால் இப்ப உங்கள் அண்ணனை சீனா ஆதரவாளர் என்று இந்தியா சொல்லுது. எனவே ஒருக்கால் டில்லிக்கு விசிட் செய்து அவையின்ட சந்தேகத்தை போக்கிவிடுங்களேன்.
கோத்தபாயா ராஜபக்ச- சரி மாத்தயா, அண்ணாவை ஒருக்கா திருப்பதி சாமி தரிசனத்திற்கு போகச் சொல்லுறன். அல்லது சுப்பிரமணியசுவாமியை ஒரு மாநாட்டுக்கு அழைக்கச் சொல்லுறன்.
சம்பந்தர் அய்யா- நல்லது. அப்படியே நீங்க ஜனாதிபதியானால் என்ர பதவிக்கு ஆபத்து இல்லைத்தானே?
கோத்தபாயா ராஜபக்ச- என்ன மாத்தயா, இப்படி கேட்டிட்டீங்க? பதவி இல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்று எனக்கு தெரியும்தானே! தேவையென்றால் இன்னொரு சொகுசு பங்களாவும் தரச் சொல்லுறன்.
சம்பந்தர் அய்யா- மிக்க மகிழ்ச்சி. இப்ப “நல்லாட்சி” என்று சொல்லுறது போன்று அப்பறம் உங்கட ஆட்சியை நாங்கள் என்னவென்று சொல்லுவது?
கோத்தபாய ராஜபக்ச- மானங்கெட்ட ஆட்சி என்று சொல்லுங்களேன். ஏனென்றால் உங்களுக்கு அப்படி ஒன்று இல்லைத்தானே!
குறிப்பு- யாவும் கற்பனை இல்லை.
கோத்தபாயா ராஜபக்ச ஜனாதிபதியானால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீர்வு வரும் என சம்பந்தர் அய்யா அறிக்கைவிட்டார்.
24 மணி நேரம் என்று கூறினால் மக்கள் நம்பவார்களா என சுமந்திரன் சந்தேகமாக கேட்டார்.
அதற்கு சம்பந்தர் அய்யா “ ஒரு வருடத்திற்குள் தீர்வு என்று இதுவரை எத்தனை வருடம் கூறிவிட்டேன். ஒருமுறைகூட எங்கே தீர்வு என்று யாராவது கேட்டார்களா. இல்லைத்தானே? எனவே 24 மணி நேரத்திற்கள் தீர்வு என்றாலும் தமிழ்மக்கள் நம்பி வோட்டு போடுவார்கள”; என்றார்.
தான் கூறியதைக் கேட்டு தமிழ் மக்கள் எல்லாம் கோத்தபாயாவுக்கு வோட்டு போடுவதாக சம்பந்தர் அய்யா கனவு கண்டார். அவர் கனவு இடையில் குழம்பிவிட்டது.
இருப்பினும் தன் கனவு நிறைவேற பத்திரகாளி அம்மன் துணை செய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சம்பந்தர் அய்யா சென்றார்.
No comments:
Post a Comment