Sunday, July 29, 2018

தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா?

தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா?
•“நாம்தமிழர்” சீமான் கைது. அவர் மீது பல வழக்குகள்.
•நூல் வெளியிட்டமைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் தோழர் வெற்றிதமிழன் சிறையில் அடைப்பு
•எட்டு வழிச்சாலை தொடர்பாக மக்கள் கருத்து கேட்டமைக்கு முன்னாள் எம்.எல.ஏ பாலபாரதி மீது வழக்கு
•சி.பி.எம் முன்னாள் எம்எல்.ஏ டெல்லிபாபு மீது வழக்கு, கைது
•மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவர் மீது தேச துரோகச் சட்டம்
•தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு
•இயக்குனர் வ.கௌதமன் மீது வழக்கு
•மே 17 திருமுருகன் காந்தி மீது வழக்கு
•இயக்குனர் அமீர் மீது வழக்கு
•புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு
•நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு
•சேலம் கல்லூரி மாணவி வளர்மதி மீது வழக்கு
•சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது தேசத் துரோக வழக்கு.
•சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது வழக்கு
•போலீஸை விமர்சித்தமைக்காக தொலைக்காட்சி நடிகை நிலானி மீது வழக்கு, கைது
.
•ஸ்டெர்லைட் படுகொலை விசயத்தில் போலீஸை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த பெண் மீது வழக்கு, கைது
•சேலத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது வழக்கு மற்றும் தினமும் தொடரும் கைதுகள்
•திருவண்ணாமலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்காக விவசாயிகள் கைது
•பிருந்தா காரத் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, அனுமதி கடிதத்தில் உறுதி அளித்திருந்ததைக் காட்டிலும் கூடுதலாக கூட்டம் வந்துவிட்டனர் என வழக்கு
ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் மட்டுமல்ல... அரங்கக் கூட்டத்துக்குக் கூட அனுமதி மறுக்கப்படும் நிலை..
.
சேலம் 8 வழிச்சாலை செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி. அரசு கேபிளில், சம்பந்தமே இல்லாத வரிசையில் மாற்றிவிடும் நிலை..
.
'போராட்டம் நடத்துவதை விமர்சிக்கும் பா.ஜ.க.வினரே போராட்டம் நடத்துவதுதான் வினோதம்' என ட்விட்டரில் எழுதியதற்காக, சென்னையில் பணியாற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஓர் இளம் (இஸ்லாமிய) பத்திரிகையாளரை அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை
அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து இந்த சர்வாதிகார அரசை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment