•தமிழன் தலை நிமிரக்கூடாதா?
ஆண்டு- 2040 ( நன்றாக கவனிக்கவும். இது 2040ம் அண்டு நடக்கும் சம்பவம்)
மகிந்த ராஜபக்ச தனது 95 வது வயதில் மரணப் படுக்கையில் இருக்கிறார்.
ஒரு வயதானவர் சாகப் போகிறார். அதை மகிழ்வாக நினைப்பது தமிழர் மரபில்லையே என ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து எழுதுகிறார்.
மகிந்த ராஜபக்சவை சாகடிக்க முடியாதவர்கள் அவர் இயற்கையாக சாகும்வரை காத்திருப்பவர்கள் தங்களுக்குள் பத்து பிரிவாக பிரிந்து இருப்பவர்கள் என ஜெர்மனியில் இருந்து ஒருவர் வகுப்பெடுக்கிறார் ( இவர் தன்னை பகுத்தறிவு வாதியாக அடிக்கடி கூறிக்கொள்வார்)
சாவு எல்லோருக்கும் வருவதுதானே, மகிழ்ந்த ராஜபக்ச சாவை மகிழ்பவர்கள் ஒரு நாள் சாகத்தானே வேண்டும் என்று லண்டனில் இருந்து ஒருவர் தத்துவம் பேசுகிறார்.
மகிந்த ராஜபக்சதான் தமிழர்களை அழித்தார் என்று இன்றும் நம்பும் முட்டாள்களை என்னவென்று அழைப்பது? பல நாடுகள் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது மகிந்த ராஜபக்ச மட்டும் எப்படி தமிழர்களை காப்பாற்ற முடியும்? என வேறு ஒருவர் கேட்கிறார்.
பாவம் தமிழன்! தன் உறவுகளை ஆயிரக் கணக்கில் கொன்றவர்களின் மரணத்தைப் பற்றிக்கூட கருத்து கூற முடியவில்லை.
என்னே கொடுமை இது?
தமிழன் தலை நிமிரக்கூடாதா?
காலம் பூரா அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா?
No comments:
Post a Comment