Friday, August 31, 2018

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு
என்று கேட்ட தமிழ் சமூகத்தில்,
எங்களாலும் ஆயுதம் ஏந்திப் போராட முடியும் என்று
சாதித்து காட்டிய சாதனையாளர்கள்
இவர்கள் ஈழத்து அதிசயம்!
குறிப்பு- புகைப்பட தினத்திற்கான பதிவு இது.

•நாங்க பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

•நாங்க பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!
இதோ இங்கு சாரம் கட்டிக்கொண்டு மழையில் நனைந்தபடிமீட்புபணியில்ஈடுபடுபவர்….கேரளாவின் ராணி தொகுதி எம்எல்ஏ ஆப்பிரகாம் அவர்கள்.
இதோ எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மாவைசேனாதிராசா, சரவணபவன. பாவம். இவர்கள் தமக்கு தமது கையால் குடை பிடிக்க முடியாதவர்கள்.
இவர்களுக்கு குடை பிடிக்கவே இன்னொருவர் வேண்டும். இந்த லட்சணத்தில மழையில் நனைந்து மக்களுக்கு பணி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது ரூமச்!
என்ன செய்வது? கேரளா எம்எல்.ஏ போல நமக்கு மக்கள் பிரதிநிதிகள் கிடைக்க மாட்டார்களா என நாங்க பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை.

சம்பந்தர் அய்யா மெண்டலா?

•சம்பந்தர் அய்யா மெண்டலா? அல்லது
மக்களை மெண்டலாக்க பார்க்கிறாரா?
யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவன் “ டாக்டர்! ஒருத்தருக்கு மெண்டல் குணமாயிடுச்சு என்று எப்படி கண்டு பிடிப்பது?" என்று கேட்டான்.
அதற்கு டாக்டர் “சின்ன சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
“கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா டாக்டர்?” என்று மாணவன் கேட்டான்.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வைச்சிட்டு அதன் அருகில் ஒரு சின்ன ஸ்பூன், ஒரு மக்( குவளை) வைச்சிடுவோம். போய் அந்த பக்கெட்டில உள்ள தண்ணியை காலி பண்ணு என்று மனநோயாளியிடம் கூறுவோம்” என்றார் டாக்டர்
“ஓ! புரியுது. குணமாகாத ஆளாக இருந்தால் ஸ்பூனில தண்ணியை எடுத்து வெளில ஊத்திக்கிட்டு இருப்பான். அப்படிதானே டாக்டர்?” என்றான் மாணவன்.
அதற்கு டாக்டர் “எக்ஸாட்லி! இதுவே உன்கிட்ட சொல்லியிருந்தா நீ என்ன பண்ணியிருப்பே?” என்று கேட்டார்.
உடனே அந்த மாணவன் “ நானாய் இருந்தால் குவளையால் தண்ணியை மள மளவென்று அள்ளி ஊத்தியிருப்பேன்” என்றான்.
டாக்டர் சிரித்துக்கொண்டு சொன்னார் “ இந்த மாதிரி கேஸ்களை நாங்க செமி என்று சொல்வோம்”
இதைக் கேட்டு திகைத்த மாணவன்” என்னது டாக்டர்? நான் செமி மெண்டலா? அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?” என்று கேட்டான்.
“பக்கெட்டை எடுத்து கவுத்திட்டு போயிட்டே இருப்பான்” என்றார் டாக்டர்.
இதை அவதானித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் எழும்பி “ டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்
டாக்டர் “ என்ன சந்தேகம் தாராளமாய் கேள்” என்றார்
“ஒரு வயதானவர் அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தீர்வு வரவில்லை. அவர் முழு மெண்டலா? அல்லது செமி மெண்டலா?” என்று அந்த மாணவன் கேட்டான்.
அதற்கு அந்த டாக்டர் “அவர் மெண்டல் இல்லை. நல்ல தெளிவாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மக்களை மெண்டலாக்கப் பார்க்கிறார்” என்றார்.
(யாவும் கற்பனை அல்ல)
குறிப்பு- யாழ் மருத்துவ பீட மாணவர்களும் பேராசிரியரும் மன்னிக்க வேண்டும்.

பாராளுமன்றம் மட்டுமல்ல மாகாணசபையும் பன்றிகள் தொழுவமே!

•பாராளுமன்றம் மட்டுமல்ல
மாகாணசபையும் பன்றிகள் தொழுவமே!
வடமாகாணசபையின் காலம் முடிவடைகிறது. இதுவரை வட மாகாணசபை சாதித்தது என்ன?
எந்த முகத்தோடு இவர்கள் மீண்டும் மக்கள் முன் வரப் போகிறார்கள்? இனி எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறார்கள்?
இவர்கள் தங்கள் பதவி நலனைப் பற்றி சிந்தித்தார்களேயொழிய மக்கள் நலன் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை.
இவர்கள் தங்கள் சம்பளம் தவிர தமது உதவியாளர்கள் என்று தமது குடும்ப உறவினர்களின் பெயரைக் கொடுத்து அந்த சம்பளத்தையும் எடுத்து வருகிறார்கள்.
சிலர் மற்றவர்களுக்கு வேலையைக் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து மாதா மாதம் கமிசனாக பணம் பெற்று வருகின்றனர்.
ஒரு படித்த பட்டதாரிக்கு 30 ஆயிரம் ரூபாவே சம்பளமாக கிடைக்கிறது. ஆனால் ஒரு மாகாணசபை உறுப்பினர் சுமார் இரண்டரை லட்சம் ருபா மாதம் தோறும் சம்பாதிக்கிறார்.
இப்போது புரிகிறதா? ஏன் இவர்கள் எல்லோரும் தேர்தலில் போட்டியிட ஓடி வருகிறார்கள் என்று.
மாகாணசபை அவைத் தலைவர் சிவஞானம். இவர் தனது உதவியாளர்களாக நாலு பேரின் பெயரைக் கொடுத்திருக்கிறார்.
அவர்களின் முகவரியாக தனது வீட்டு முகவரியை கொடுத்திருக்கிறார். இவர்தான் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு சொகுசு கதிரைகள் தான் உட்காருவதற்கு வாங்கியவர்.
மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா. இவர் தனது உதவியாளராக மூன்று பேரைக் கொடுத்துள்ளார். அதில் இருவர் கொழும்பு முகவரியைக் கொண்டிருக்pன்றனர்.
வடமாகாணசபைக்கு வடமாகாணத்தை சேர்ந்தவர்களை ஏன் இவரால் வேலைக்கு அமர்த்த முடியவில்லை? இவர்தான் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்விற்கு கொடுத்த ஏழாயிரம் ரூபாவை திருப்பி தரும்படி கேட்டவர்.
டெனிஸ்வரன் தன் உதவியாளராக கொஞ்சம்கூட கூச்சமின்றி தன் மனைவியின் பெயரைக் கொடுத்து சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த யோக்கியவான்தான் சுமந்திரன் வழிகாட்டலில் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு போட்டவர்.
தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் வாழ வழியின்றி கஸ்டப்படுகின்றனர்.
அவர்களில் ஒருவரைக்கூட தமது உதவியாளர்களாக ஏன் இவர்களால் நியமிக்க முடியவில்லை?
மாகாணசபை உறுப்பினர்களும் அவர்களின் உதவியாளர்களின் விபரமும் கீழே தரப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில் மாகாணசபை அமைச்சர்களின் உதவியாளர்கள் விபரம் தரப்படும்.
அதற்கடுத்த பதிவில் சொகுசு வாகனம் வாங்கி விற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.

நடிப்பிலும் இவர் “சிவாஜி”தான்

அமெரிக்க தேர்தலில்
ஹிலாரி வெல்ல வேண்டும் என்று
நல்லூரில் தேங்காய் உடைத்த தலைவர் இவர்!
எம்.பி பதவி இல்லையென்றால் 
பிரதேச தலைவர் பதவியில் இருப்பார்
அதுவும் இல்லை என்றால்
மாகாணசபை உறுப்பினராக இருப்பார்
ஆனால் பதவி இல்லாமல் இவர்
ஒருநாள்கூட இருக்க மாட்டார்!
பெயரில் மட்டுமல்ல
நடிப்பிலும் இவர் “சிவாஜி”தான்

தமிழா! இன உணர்வு கொள்!

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான்.
அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான்.
கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான்.
அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால் ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான்.
இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள்.
மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள்,
கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள்,
தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள்.
ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும்.
அது எப்போது நிகழும்?
தமிழா! இன உணர்வு கொள்!

•திமுக தமிழ்நாட்டுக் கட்சிதான்

•திமுக தமிழ்நாட்டுக் கட்சிதான்
ஆனால் தமிழருக்கான கட்சி இல்லை!
செய்தி- பாஜக எதிர்க்கட்சிதான். ஆனால் எதிரிக் கட்சி இல்லை- துரைமுருகன்
முதலில் “எதிர் கட்சிதானே தவிர, எதிரி கட்சியல்ல” என்றுதான் ஆரம்பிப்பார்கள்
அப்புறம் “அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ யாரும் கிடையாது” என்று தத்துவம் உதிர்ப்பார்கள்
அதற்கப்புறம் “அது ஒன்றும் தீண்டத்தகாத கட்சி கிடையாதே?” என்ற கூறுவார்கள்
கடைசியில், “மக்கள் நலனுக்காக, சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு சில கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்” என்பார்கள்.
இந்த ஃபார்முலாதானே இத்தனைகாலமாக ஓடிக்கிட்டு இருக்கு..!! இதைச் சொல்லித்தானே இத்தனை காலமாக காங்கிரசுடனும் பாஜக வுடனும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது புரியாமல் கலைஞர் இறந்த பின்பும் இட ஒதுக்கீட்டிற்காக பார்ப்பணியத்தை எதிர்த்தார் என்று அப்பாவி உடன்பிறப்புகள் பதிவு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.