•பாராளுமன்றம் மட்டுமல்ல
மாகாணசபையும் பன்றிகள் தொழுவமே!
மாகாணசபையும் பன்றிகள் தொழுவமே!
வடமாகாணசபையின் காலம் முடிவடைகிறது. இதுவரை வட மாகாணசபை சாதித்தது என்ன?
எந்த முகத்தோடு இவர்கள் மீண்டும் மக்கள் முன் வரப் போகிறார்கள்? இனி எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறார்கள்?
இவர்கள் தங்கள் பதவி நலனைப் பற்றி சிந்தித்தார்களேயொழிய மக்கள் நலன் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை.
இவர்கள் தங்கள் சம்பளம் தவிர தமது உதவியாளர்கள் என்று தமது குடும்ப உறவினர்களின் பெயரைக் கொடுத்து அந்த சம்பளத்தையும் எடுத்து வருகிறார்கள்.
சிலர் மற்றவர்களுக்கு வேலையைக் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து மாதா மாதம் கமிசனாக பணம் பெற்று வருகின்றனர்.
ஒரு படித்த பட்டதாரிக்கு 30 ஆயிரம் ரூபாவே சம்பளமாக கிடைக்கிறது. ஆனால் ஒரு மாகாணசபை உறுப்பினர் சுமார் இரண்டரை லட்சம் ருபா மாதம் தோறும் சம்பாதிக்கிறார்.
இப்போது புரிகிறதா? ஏன் இவர்கள் எல்லோரும் தேர்தலில் போட்டியிட ஓடி வருகிறார்கள் என்று.
மாகாணசபை அவைத் தலைவர் சிவஞானம். இவர் தனது உதவியாளர்களாக நாலு பேரின் பெயரைக் கொடுத்திருக்கிறார்.
அவர்களின் முகவரியாக தனது வீட்டு முகவரியை கொடுத்திருக்கிறார். இவர்தான் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு சொகுசு கதிரைகள் தான் உட்காருவதற்கு வாங்கியவர்.
மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா. இவர் தனது உதவியாளராக மூன்று பேரைக் கொடுத்துள்ளார். அதில் இருவர் கொழும்பு முகவரியைக் கொண்டிருக்pன்றனர்.
வடமாகாணசபைக்கு வடமாகாணத்தை சேர்ந்தவர்களை ஏன் இவரால் வேலைக்கு அமர்த்த முடியவில்லை? இவர்தான் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்விற்கு கொடுத்த ஏழாயிரம் ரூபாவை திருப்பி தரும்படி கேட்டவர்.
டெனிஸ்வரன் தன் உதவியாளராக கொஞ்சம்கூட கூச்சமின்றி தன் மனைவியின் பெயரைக் கொடுத்து சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த யோக்கியவான்தான் சுமந்திரன் வழிகாட்டலில் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு போட்டவர்.
தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் வாழ வழியின்றி கஸ்டப்படுகின்றனர்.
அவர்களில் ஒருவரைக்கூட தமது உதவியாளர்களாக ஏன் இவர்களால் நியமிக்க முடியவில்லை?
மாகாணசபை உறுப்பினர்களும் அவர்களின் உதவியாளர்களின் விபரமும் கீழே தரப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில் மாகாணசபை அமைச்சர்களின் உதவியாளர்கள் விபரம் தரப்படும்.
அதற்கடுத்த பதிவில் சொகுசு வாகனம் வாங்கி விற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment