Friday, August 31, 2018

தமிழா! இன உணர்வு கொள்!

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான்.
அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான்.
கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான்.
அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால் ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான்.
இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள்.
மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள்,
கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள்,
தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள்.
ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும்.
அது எப்போது நிகழும்?
தமிழா! இன உணர்வு கொள்!

No comments:

Post a Comment