முளந்தாளிட்டு வாழ்வதைவிட
எழுந்து நின்று மரணிப்பது மேல்!
எழுந்து நின்று மரணிப்பது மேல்!
மூன்று மனதவுரிமைச் செயற்பாட்டாளர்களை கைது செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தேவையானால் அவர்களைவ வீட்டு காவலில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அது ஆலோசனை கூறியுள்ளது.
ஜனநாயகத்திற்கு எதிர்கட்சி அவசியம். அதனை அடக்க முனைந்தால் ஜனநாயகம் வெடித்துவிடும் என்று உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
இருப்பினும் இந்திய அரசு எவரின் கருத்தையும் கேட்பதாய் இல்லை. அது தொடர்ந்து தனக்கு எதிரானவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாட்டிலும் மக்களுக்காக குரல் கொடுத்த திருமுருகன்காந்தி, வளர்மதி, முகிலன் போன்றவர்களை கைது செய்துள்ளது.
அதுவும் திருமுருகன்காந்தி மீது பிணையில் வரமுடியாத தேசவிரோத சட்டம் உட்பட 40 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மக்களுக்காக போராடுபவர்கள் மீது வழக்குகள் போட்டால் போராட்டங்களை அடக்கிவிட முடியும் என அரசு நினைக்கிறது.
ஆனால் அடக்க அடக்கதான் அதற்கெதிரான போராட்டமும் வீரியத்துடன் வெடிக்கும் என்பதை அரசு இனிவரும் காலங்களில் கண்டு கொள்ளும்.
ஏனெனில் போராட்டம் இன்பமயமானது!
No comments:
Post a Comment