•சாந்தி அக்கா! சாந்தி அக்கா!!
சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் என்ன அக்கா?
சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் என்ன அக்கா?
செய்தி- சம்பந்தரின் சாணக்கிய அரசியலை தோற்கடிக்க பல காக்கைவன்னியர்கள்- சாந்தி எம்.பி
சாந்தி அக்கா!
சம்பந்தரின் சாணக்கிய அரசியல் என்ன அக்கா?
சம்பந்தரின் சாணக்கிய அரசியல் என்ன அக்கா?
அடுத்த வருடம் தீர்வு வரும் என்று
ஒவ்வொரு வருடமும் கூறி ஏமாற்றுவதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
ஒவ்வொரு வருடமும் கூறி ஏமாற்றுவதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
அல்லது,
ஒருபுறம் அரசை ஆதரித்துக்கொண்டு
மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் பதவி அனுபவிப்பதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
ஒருபுறம் அரசை ஆதரித்துக்கொண்டு
மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் பதவி அனுபவிப்பதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
அல்லது,
இளைஞர்களுக்கு வேலை கேட்டால்
உரிமை கேட்க முடியாமல் போய்விடும் என்று சொல்லிவிட்டு
தனக்கு இரண்டு சொகுசு பங்களாக்களும்
6 சொகுசு வாகனங்களும் பெற்றதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
இளைஞர்களுக்கு வேலை கேட்டால்
உரிமை கேட்க முடியாமல் போய்விடும் என்று சொல்லிவிட்டு
தனக்கு இரண்டு சொகுசு பங்களாக்களும்
6 சொகுசு வாகனங்களும் பெற்றதுதான்
சாணக்கிய அரசியலா அக்கா?
அல்லது,
மக்கள் குறை சொன்னால் காது கேட்காது என்று கூறுவதும்
சிறையில் உள்ளவர்கள் விடுதலை பற்றிக் கேட்டால்
“என்னிடம் திறப்பு இல்லை” என்று கிண்டலாக பதிலளிப்பதும்
சாணக்கிய அரசியலா அக்கா?
மக்கள் குறை சொன்னால் காது கேட்காது என்று கூறுவதும்
சிறையில் உள்ளவர்கள் விடுதலை பற்றிக் கேட்டால்
“என்னிடம் திறப்பு இல்லை” என்று கிண்டலாக பதிலளிப்பதும்
சாணக்கிய அரசியலா அக்கா?
உங்களுக்கு பதவி தந்தவர் என்பதற்காக
என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்க அக்கா!
ஆனால் தயவு செய்து பண்டார வன்னியனோடு சம்பந்தர் அய்யாவை ஒப்பிட்டு அந்த பண்டார வன்னியனை கேவலப் படுத்தாதீர்கள் அக்கா!!
என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்க அக்கா!
ஆனால் தயவு செய்து பண்டார வன்னியனோடு சம்பந்தர் அய்யாவை ஒப்பிட்டு அந்த பண்டார வன்னியனை கேவலப் படுத்தாதீர்கள் அக்கா!!
அற்ப சலுகைகளுக்காக சிங்கள அரசிடம் மண்டியிடும் சம்பந்தரை
வெள்ளையரை எதிர்த்து போரிட்டு மடிந்த பண்டாரவன்னியனுடன் ஒப்பிட எப்படி அக்கா உங்களுக்கு மனசு வந்தது?
வெள்ளையரை எதிர்த்து போரிட்டு மடிந்த பண்டாரவன்னியனுடன் ஒப்பிட எப்படி அக்கா உங்களுக்கு மனசு வந்தது?
அதுசரி அக்கா, பதவி பெற்று ஒருவருடத்திற்குள் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் வாங்கி விட்டீர்களாமே. அதுவும் சாணக்கிய அரசியலா அக்கா?
No comments:
Post a Comment